பக்கம்:மானிட உடல்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 62 மானிட உடல் தற்காலிகமாக விசைப் புழுக்கள் உற்பத்தியில் தடைப் படுதல் அடிக்கடி நிகழும் நிகழ்ச்சியாகும்; இது நோய்களினல் நிகழ்வது; அந் நோய்களின்பொழுது உடல் வெப்பநிலை அதி கரிக்கும். விரையின் சிறு குழல்கள் கிரந்தரமாகச் சுருங்கிப் போத்ற்கு கல்லீரல் நோய், கதிர் வீச்சலால் தாக்கப் பெறு தல், குடி முதலியவை காணங்களாகும். எனினும், சிறு குழல் செயற்படா நிலையினை யொட்டி ஹார்மோன் உற்பத்தி யில் யாதொரு விளைவும் நேரிடுவதில்லை. எபிடிடைமிஸ் இது பல தாம்புகளின் தொகுதி இது ஒவ்வொரு விசையின் ஒரு புறத்தில் நெடுக அகலமற்ற தலைமுடிபோல் அமைந்துள்ளது ; இது தன்னிடம் விசைப் புழுக்களேச் சேமித்து வைத்து அவற்றினிடம் முக்கியமான மாற்றத்தை உண்டுபண்ணுகிறது. விசைகளிலிருந்து வெளிப்படும் விரைச் சாற்றின் உயிரணுக்கள் முழு வளர்ச்சியைப் பெற்றுள்ளன. உடலிலுள்ள எல்லா அணுக்களேயும்விட அவை மிகவும் சிறி யவை ; ஒவ்வொன்றிற்கும் முட்டைவடிவம் போன்ற தலையும் சவுக்கு போன்ற நீண்ட நுட்பமான வாலும் உண்டு. தலை யில் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான உயிரணுக் கோல்கள் அடங்கியுள்ளன. வால் நகர்ந்து முன்நோக்கிச் செல்லும் இயக்கத்திற்குத் துணே செய்கின்றது (படம்-45). ஆனல், அவைகள் விசைகளினுள் முன்நோக்கி நகர்ந்து செல் லும் ஆற்றலின்றி வாளா கிடக்கின்றன. எபிடிடைமிஸில்தான் அவை தாமாக நகர்ந்து செல்லும் திறனேப் பெறுகின்றன ; இவ்வாற்றலின்றி விாைச்சாற்றின் உயிரணுக்கள் பெண்ணின் இனப் பெருக்க உள்ளுறுப்புக்களைத் துளைத்துச் சென்று முட்டையைக் கருவுறச் செய்ய இயலாது. ஆண் இனப் பெருக்க உறுப்புக்களால் வெளிப்படுத்தப் பெறும் விந்து சுக்கிலம்) எனப்படும் பாய்மத்தை கருவுறச்செய்யும் ஆராய்ச் சியில் பரிசோதிக்கும்பொழுது, அகிலுள்ள விசைப் புழுக் களின் தோற்றமும் எண்ணிக்கையும் குறிக்கப் பெறுவதுடன், அவை நகரும் பாங்கும் கவனத்துடன் உற்று நோக்கப் பெற்று அந் நகர்ச்சி முக்கியமான தெனக் கருகப் பெறுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/186&oldid=865986" இலிருந்து மீள்விக்கப்பட்டது