பக்கம்:மானிட உடல்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பொதுக் குறிப்புக்கள் 13 உண்டாகிறது என்பது சரியாக நமக்குக் தெரியாது ; ஆனல் ஊறு நேரிட்டு இழையத்தில் ஒர் இடைவெளி ஏற்படுங்கால் உடனே அது உண்டாவதையும் அதிக அளவில் உண்டாவ தையும் நாம் உற்று நோக்கலாம். இந் நார்கள் வடுவினை உண் டாக்கும் இழையப் பொருள்களாலானவை ; உடலில் எந்தப் பாகத்திலும் இவை வளாக் கூடியவை. இணைக்கும் இழையநார்களில், உடல் முழுவதுமுள்ள இழைய இடைவெளிகளில் சளிபோன்ற பாய்மம் உள்ளது. அது அடிப்படைப்பொருள் எனப்படுவது. இது உயிரணுக் களிலிருந்தும் குருதியிலிருந்தும் வெளிப்படும் பொருள்களே யொட்டி இடங்களுக் கேற்றவாறும் நோங்களுக் கேற்ற வாறும் மாறுபடும். இணைக்கும் இழையமும் சளிபோன்ற அடிப்படை பொருளும் ஒரு காலத்தில் சடமான நிலையில் ஒத்தாசைப் பொருள்களாக இருந்தனவே யன்றி வேறுவிதமாக செயற் படவில்லை என்று கருதப்பட்டு வந்தன. எனினும், அண்மை யில் இணைக்கும் இழையங்கள் அலெர்ஜி நிலைகளே மாற்றக் கூடியவை என்று கண்டறியப்பெற்றுள்ளன. எனவே, அவற். மின்மீது அதிகக் கவனம் செலுத்தப் பெற்று அவற்றின் இயல்பும் பண்பும் ஆராயப் பெற்று வருகின்றன. மாங்காய்ச் சுரப்பியிலிருந்த சுரக்கும் ஹைட்ரோகார்ட்டிஸோன் என்ற பொருளைக் கண்டுபிடித்ததிலிருந்து, இணைக்கும்-இழையங் களின் நிலைகளில் மாங்காய்ச் சுரப்பியின் ஆழ்ந்த பலன் எப்படிப்பட்டது என்பது வெளியாக்கப் பெற்றிருக்கின்றது. பழுதடையும் கிரியைகள் உடலின் பழுதடையும் கிரியைகளும் புதிதாக இழையங் களின் தோற்றமும் பற்றிய வரலாற்றை ஒரளவு முற்றுப் பெறச் செய்யலாம். செயற்படும் ஒருசில உயிரணுக்கள் அழிந்தால், அவை எற்கெனவே உள்ள சட்டகத்தில் மீண் டும் இயல்பாகவே வளரும். சட்டகமே காயம்பட்டால் அல் லது சிதைந்தால், வடு இழையம் இடைவெளியை நிாப்புகின் றது. ஆனால், சிறப்பான முறையில் ஒழுங்குடன் அமைந்த சிறுநீரகம் அல்லது அதைப்போன்ற வேருேர் உள்ளுறுப்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/21&oldid=866037" இலிருந்து மீள்விக்கப்பட்டது