பக்கம்:மானிட உடல்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருப்பம் 12 சாதாரணமாகப் புணர்ச்சி நடைபெறும்பொழுது ஆணின் மனவெழுச்சியின் காரணமாக விாைப்புழுக்கள் யோனிக் குழலில் செலுத்தப் பெறுகின்றன. கருப்பம் உண் டாவதற்குப் பெண்ணிடம் மனவெழுச்சி ஏற்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. பல விசைப் புழுக்கள் யோனிக் குழலிலேயே மடிகின் றன ; ஆனல், சில புழுக்கள் கருப்பையின் வாயிலிலுள்ள கால்வாயின் வழியாகத் துடித்து கிற்கும் தம்முடைய வால் முன்னுேக்கித் தள்ளுவதன் காரணமாக நுழைந்து கருப்பை யின் மேல் நோக்கிச் சென்று சினைக் குழலினுள்ளும் செல்லு கின்றன. எவ்வளவு காலம் விாைப்புழு உயிருடன் இருக்கு மென்று நிச்சயமாகத் தெரியவில்லை ; ஆணுல், ஒரு வேளே கிட்டத்தட்ட ஒரு நாளாவது உயிர் வாழக் கூடும். கரு அணு கருத்தரித்தற்கு முதிர்ச்சியடையும்பொழுது புணர்ச்சி நடை பெருவிட்டால், கருத்தரித்தற்குரிய முட்டை அங்கிருப்ப தில்லை ; கருப்பமும் ஏற்படச் சந்தர்ப்பம் இல்லை. ஆனால், முட்டை பக்குவப்படுங் காலம் சரியாக இருந்து கருக் குழ லில் முட்டையும் இருந்தால், விரைப்புழு முளே அணுவின் உறையைத் தளேத்துச் செல்லக் கூடும் (படம் 54). இப் பொழுது கருவுறல்நடைபெறுகின்றது; சாதாரணமாக, இது சினைக் குழலின் வெளிப்புறப் பாதியில் ஏற்படுகின்றது. இருபத்து நான்கு மணி நேரத்தில் கருவுற்ற பெண் கரு அணு இாண்டு அணுக்களாகப் பிளந்துகொள்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/219&oldid=866057" இலிருந்து மீள்விக்கப்பட்டது