பக்கம்:மானிட உடல்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 மானிட உடல் யில் விாைக்கும் இழையத்துடன் ஒப்பிடக் கூடியவாறு பல குருதிக் குழல்களுடன் கூடிய மிருதுவான தசையிலைான தால், புணர்ச்சித் தாண்டுதல் யோனிலிங்கத்தை விாைக்கும் படி செய்கிறது. ஆண் குறியில் சிறுநீர்ப் புறவழியுள்ளத் ; யோனிலிங்கத்தில் அது இல்லை. இதுவே இரண்டற்குமுள்ள வேற்றுமை. அன்றியும், சிறுநீர்ப் புறவழி சிறுநீர் மண்ட லத்தைச் சேர்ந்தது ; அது இனப் பெருக்க மண்டலத்தின் அருகில் இருப்பதைத் தவிர அதனுடன் வேறு எவ்வித தொடர்பும் கொள்ளவில்லை. அது யோனி லிங்கத்திற்கும் யோனிக் குழலுக்கும் இடையில் வெளிப்புறமாகக் கிறக் கின்றது. சளி சுரக்கக் கூடிய இரண்டு தசைத் தொகுதிகள் உள் ளன; அவை யோனியும் யோனிக் குழலும் சேரும் இடத் திற்கு இரு புறமும் திறக்கின்றன. அவை வெளிப்புறத்தில் தெரியும் பிறப்புறுப்புக்களே வழுக்கிடச் செய்வதற்குத் துணை சய்கின்றன. புணர்ச்சியே கண்டறியாத கங்கையின் யோனி வாயோடு ஒரு மெல்லிய சவ்வு மூடிக்கொண்டிருக் கும் : அந்தச் சவ்வின கன்னிச் சவ்வு' என்று வழங்குவர். ஆயினும், மாதவிடாய் ஒழுக்கு வெளிப்படுவதற்கு அது சிறி தளவு திறந்துதான் இருக்கும். புணர்ச்சியின்பொழுது இது கிழிந்து சுருண்டொழிகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/218&oldid=866055" இலிருந்து மீள்விக்கப்பட்டது