பக்கம்:மானிட உடல்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2伊6 மானிட உடல் நடு நரம்பு மண்டலம் இதில் மூளையும் நடு நரம்பும் அடங்கியுள்ளன (புகைப் - படும் 22-ஐப் பார்க்க). அவை வரிசையாக மூன்று சவ்வுகளி ல்ை மூடப்பெற்றிருக்கின்றன. அவற்றுள் குருதிச் சவ்வு, சிரச்சவ்வு என்ற இரண்டும் மிகவும் நுட்பமான்வை. நார்ச் சவ்வு எனப்படும் மூன்ருவது சவ்வு மிகவும் கடினமானதொரு கார்ச் சட்டை போன்றது. இவற்ருேடு மூளே, எலும்பாலான மண்டையறையில் அடக்கம் செய்யப்பெற்றுள்ளது ; நடுநாம் பும் முள்எலும்புக் கட்டைகளாலும் முள்எலும்பு வளைவுக ளாலும் உண்டான ஒரு எலும்புக் குழலினுள் பாதுகாப்பாக அமைந்துள்ளது. மூளையும் தண்டு வடமும் மூனே-முதுகுத் தண்டுப் பாய்மம் எனப்படும் ஒரு திரவப் பொருளால் சூழப்பெற்றுள்ளன. இந்தப் பாய்மம் மூளே அறைகளில்ஏற்றறைகளில்-உள்ளது ; அது குருதிச் சவ்விற்கும் ஈாச்சவ்விற்கும் இடையிலுள்ள சிறு ஈரச்சவ்விடம்" எனப் படும் இடைவெளியில் சூழ்ந்திருக்கின்றது. மூளை - முதுகுத் தண்டுப் பாய்மம், மூளையையும் முதுகுத்தண்டையும் காப் பதற்கு ஒரு மெத்தைபோல் உதவுவதுடன், மூளையின் வளர்சிதை மாற்றத்திற்கு, நிணநீரும் இழையப் பாய் மமும் உடலிலுள்ள பிற இழையங்களுக்கு உதவுவகைப் போல, உதவுகின்றது. இந்தப் பாய்மம் குருதியிலுள்ள இயைபுப் பொருள்களேயே பெற்றுள்ளன. ஆல்ை, ஒருசிறு வேற்றுமை உண்டு. இதில் குருதியணுக்கள் இல்லை. இந்தப் பொருளிலுள்ள பல்வேறு இயைபுப் பொருள்களின் விகிதத்திற்கும் குருதியிலுள்ள அதே இயைபுப் பொருள் களின் விகிதத்திற்கும் அதிக வேற்றுமை உண்டு. நடுநரம்பு மண்டலத்திலுண்டாகும் நோய்களில் பெரும்பாலானவை மூளை-முதுகுத்தண்டிலுள்ள பாய்ம அமைப்பிலுள்ள மாறு ப்ாடுகளில் பிரதிபலிக்கின்றன ; அத்தகைய நோய்கள் ஏற் படுங்கால் எல்லா நோய்களுக்குமே இந்தப் பாய்மத்தைப் பரிசோதனை செய்தல் மிகவும் இன்றியமையாதது. முதுகின்

  • Subarachnoid space.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/244&oldid=866111" இலிருந்து மீள்விக்கப்பட்டது