பக்கம்:மானிட உடல்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 மானிட உடல் N་གོ་བ། གླིང་རྒྱུ། 8 مراع so '; (PN 4 இ! so படம் 67. பெருமூளை (பக்கத் தோற்றம்). 1. முன்புறப் பகுதி. 2. பொட்டெலும்புப் பகுதி (கேள்வி). 3. பார்வையுணர்ச்சியின் மூலத்தானம், 4. பின் மண்டைப் பகுதி (பார்வை). 5. கேள்வியுணர்ச்சியை ஏற்கும் மூலத்தானம். 6. பக்க வாட்டிலுள்ள பிளவு. ?. நடுவிலுள்ள பிளவு. 8. செய்கைப் பிதுக்க முள்ள இடம். 9. மண்டைப்பக்கப் பகுதி (வலி, தொடுதல், இருப் பிடம், குட்டுநிலை ஆகிய உணர்ச்சிகளை அறிவது.) 1. go சிறந்த வளர்ச்சியே மனிதனேக் கீழ்நிலையிலுள்ள முதுகெலும் புடைப் பிராணிகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றது. பெருமூளையின் அர்த்த கோளங்கள் இதழ்களாகப் பிரிக் கப் பெற்றுள்ளன. இவ்விதழ்கள் மண்டைப் பகுதி அவற்றை மூடிக்கொண்டிருப்பதற் கேற்றவாறு பெயரிடப் பெற்றுள் ளன. பெருமூளையின் அர்த்த கோளங்களின் சில குறிப் பிட்ட இதழ்களினல் சில செயல்கள் நடைபெறுவதாகக் கண் டறியப் பெற்றுள்ளன. ஆயினும், அர்த்த கோளங்களின் முக்கியமான பகுதிகள் அவ்விதழ்களே மூடிக்கொண்டிருக் கும் பெருமூளையின் புறணிப் பகுதிகள் அல்லது சாம்பல் நிறப் பொருள் என்பதை நாம் அறிய வேண்டும் ; நன்ருகப் புரிந்துகொள்ள வேண்டும். அர்த்த கோளங்களின் பெரும் பகுதி வெண்ணிறப் பொருளாலானது ; அது புறணியுடன் நெருங்கிய தொடர்புள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/254&oldid=866131" இலிருந்து மீள்விக்கப்பட்டது