பக்கம்:மானிட உடல்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நரம்பு மண்டலமும் சிறப்பான பொறிகளும் 241 லிருக்கும் நாம் குறைந்த அமுக்க கிலையிலுள்ள காற்றை விழுங்கி இடைச்செவிக்கு அனுப்பும்வரை இந் நிலை இருந்து கொண்டே யிருக்கும். தொண்டையில் ஏற்படும் தொற்றினை யொட்டி இடைச் செவியிலும் தொற்று ஏற்பட்டு காற்றிற்குப் பதிலாகச் சீழ் கிசம்பிவிடும். செவிப்பறையிலுள்ள மிகச் சிறிய சந்து* வழியாகச் இந்தச் சீழ்வெளியேறி, செவிப்பறையும் சுகப்பட்டு விடும். எனினும், அடிக்கடி நேரிடும் கொற்றினுல், செவிப் பறையின் அதிர்ச்சியும் எலும்புகளின் அதிர்ச்சியும் குறைந்து போகக் கூடும். உட் செவி (படம் - 74.) பாய்மத்தால் நிரப்பப் பெற் அறுள்ளது. முட்டை வடிவமுள்ள சன்னல் முழுவதும் பாவி யுள்ள சவ்வின் அதிர்ச்சிகள் பாய்மத்தின் குறுக்கே கேள்விப் புல காம்பின் இறுதியுறுப்பாகிய புரிமுடிக்குக் கொண்டு செல்லப் பெறுகின்றன. இந்தப் புரி முடி என்பது ஒர் அங்கு லத்திற்கு மேல் நீளமாகவுள்ள பாய்மப் பொருளால் கிரப்பப் பெற்ற ஒரு குழல் , அது நத்தைக் கூடுபோல் சுருண் டிருக்கின்றது. புரி முடியில் மயிர் போன்ற அதைப்புகளைக் கொண்ட உயிரணுக்கள் இருக்கின்றன ; இவ் அதைப்புக்கள் பாய்மத்திலுள்ள அலைகளைப் பற்றுகின்றன. இந்த உள் துடிப்பு கூடல் வாயினுல் எட்டாவது மண்டை காம்பு முடிச்சு களுக்கு (ஒலி காம்பு முடிச்சுகளுக்கு) அனுப்பப் பெறு ன்றது. இந்த மண்டை காம்பு மூளையை நோக்கி நாப்ப விழுதுகளே அனுப்புகின்றன. கேள்வி காம்புக்கு மிகத் தெளிவான முறையில் எலும் பின் மூலம் ஒலி கடத்தப் பெறுகின்றது. இவ் வழி ஒலியலை களேப் பாப்பும் வழிகளில் மிகவும் திறனற்ற தொன்ருகும். எனினும், காதின் பின்புறமுள்ள எலும்பை யொட்டி ஒரு இசைக் கவையை வைத்தால், இடைக்கனு செவிடாக இருந்த போதிலும் அது கேட்கப் பெறுகின்றது. இது பல செவிடர்

  • Siit. மா. உ. 16
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/279&oldid=866186" இலிருந்து மீள்விக்கப்பட்டது