பக்கம்:மானிட உடல்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 மானிட உடல் ஊற்றறைகளில் குருதி பொழிகின்றது. அட்ரியோவெண்ட்ரி குலர் வால்வுகள் இப்பொழுது திறந்த கிலேயிலிருப்பதால், குருதி தடையின்றி விரிந்த நிலையிலுள்ள ஏற்றறைகளிலும் தொடர்ந்து செல்கிறது. ೩5ು! விரிந்த நிலையிலிருக்கும் கால அளவினே இதயம் விரிதல் என்று வழங்குவர். இதே நேரத்தில் சைனே-அட்ரியல் முண்டில் ஒரு துடிப்பு எழுந்து, ஊற்றறைகளின் தசைகள் முழுவதும் பாந்து சென்று அவ்வறைகளேச் சுருங்கச் செய்கின்றது. இத ல்ை ஊற்றறைகள் தம்மிடமுள்ள குருதி முழுவதையும் ஏற்றறைகளுக்குள் பிழிந்துவிடுகின்றன. குருதி வலப்புற ஏற்றறையை அடைய வேண்டுமானல் அது மூவிதழ் வால் வைக் கடந்து செல்ல வேண்டும். இடப்புற ஏற்றறையை அடைய வேண்டுமானல் அது மிட்சல் வால்வைக் கடந்து செல்ல வேண்டும். ஊற்றறைகளில் தொடங்கின சுருக்க அலை ஏற்றறை களின் வழியாக விரைவாகச் செல்கிறது; அதனுல் அதிக அமுக்கத்துடன் குருதிப் பிழம்பு ஏற்றறைகளுக்கு வெளியே பீச்சப்பெறுகின்றது. வலப்புற ஊற்றறையில் இக் குருதி மூவிதழ் வால்வை வேகமாக மூடச்செய்து துரையீரல் வால் வைத் திறக்கிறது. அதன் பிறகு அக் குருதி நுரையீரலி லுள்ள பாய் குழல்களில் நுழைகிறது. இடப்புற ஏற்றறையி லுள்ள குருதி மிட்சல் வால்வை மூடிக்கொண்டு, பெருநாடி யில் நுழைந்து உடலிலுள்ள பாய்குழல்களில் செல்லுகின் றது. ஊற்றறைகளும் ஏற்றறைகளும் ஒர் அலைவடிவமாகச் சுருங்கினலும் அவை அவ்வாறு சுருங்கும் காலத்தை இதயம் சுருங்கல்’ என்று வழங்குவர். இதயம் விரிதல் மீண்டும் நடைபெறுங்கால் நுரையீரல் நாடிகளிலும் பெருநாடியிலும் பீச்சப்பெறும் குருதி ஏற்றறை களுக்குக் கிரும்பிவர முயல்கிறது. நுரையீரல் நாடிகளிலும் பெருநாடியிலும் உள்ள வால்வுகள் மூடிக்கொள்வதால் ஏற் றறைகளில் பின்னேக்கிப் பாயும் குருதி கடுக்கப்பெறுகின் றது. ஒரு நாள் அல்லும் பகலும் கிமிடத்திற்கு 65-லிருந்து 90 தடவைகள்வ ைஒவ்வொரு நிமிடமும் இவ்வாறு இதயம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/28&oldid=866188" இலிருந்து மீள்விக்கப்பட்டது