பக்கம்:மானிட உடல்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோல் 283 துரம்புகள் மேற்பரப்பிலுள்ள எபிதீலியத்தைத் துளைத்துக் கொண்டு வருகின்றன. உடல் சூட்டு நிலை ஒழுங்குபடுத்து வதில் வேர்த்தல் சிறந்த முறையில் பங்குகொண்டிருக் கின்றது. உடல் நலத்துடன் இருக்கும் உடல் அதிகமான சூடான நிலையை அடையும்பொழுது, அதைச் சாதாரண சூட்டு நிலைக்குக் கொண்டுவருவதற்கு வேர்த்தல்தான் அதன் படம் 92. வேர்வைச்சுரப்பிகள். 1. மேல் தோல், 2. வேர்வைச் சுரப்பி களின் தாம்பு கள். 3. வேர்வைச் சுரப்பி கள், இயந்திர அமைப்பாகத் துணைபுரிகின்றது. வேர்வைச் சுரப்பிகளிலிருந்து வெளிப்படும் சுரப்புநீர், நீரும் உப்புக் களும் அகற்றப்பெறுவதில் முக்கிய துணையாக இருக் கின்றது ; ஆகவே, உடலின் நீர் ஒம்புதலில் இதையும் கனக் கிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். வெப்பமான காலத்தில், சிறப்பாக ஒருவர் கொதிகலன் உள்ள அறை போன்ற ஒரிடத் தில் வேலை செய்யும்பொழுது, அவருடைய உப்பு இழப்பு அவ ரைப் பலவீனப்படுத்தக் கூடும் ; அதனுல் தசைவலிகளும் நேரிடலாம். அதிகமான அளவு நீர்பருகுவதால், அதிகமான உப்பிழப்புதான் உண்டாகும் ; ஆகவே, வேலை செய்யும் கிபந் தனகளுக்கேற்றவாறு அடிக்கடி உப்பையும் (சோடியம் குளோரைடு) உட்கொள்ளுதல் அவசியமாகிறது. தோலடி இழையம், அஃதாவது கோலடியிலுள்ள கொழுப்பு அடுக்கு, தோலின் ஒரு பகுதியாகக் கொள்ளப் படுவதில்லை ; ஆனால், வெப்பத்தைப் பாதுகாப்பதில் அதுவும் சிறந்த துணையாக அமைந்துள்ளது. ஆண்களேவிட பெண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/321&oldid=866281" இலிருந்து மீள்விக்கப்பட்டது