பக்கம்:மானிட உடல்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 மானிட உடல் 110-லிருந்து 140 மில்லி மீடர் பாதாஸ்மாகும். இந்த அமுக்க நிலைகளில்தான் இதயம் உட்பட உடலிலுள்ள எல்லா உறுப் புக்களும் பாய்குழல்கள்மூலம் தேவையான அளவு குருதியைப் பெறுகின்றன. ஒரு மனிதன் வயோதிக நிலையை அடையும் பொழுது இந்த இருவித அமுக்கங்களும் அதிகரிக்கக்கூடும். ஒரு தனி மனிதனுடைய குருதியமுக்கம் பகற்காலத் திலும் நாளுக்கு நாளும் மாறுபடக் கூடும் என்பதை நாம் உணர்தல் இன்றியமையாதது. காம்பு மண்டலத்தாலும் மாங்காய்ச் சுரப்பிச் சாறு வகைகளே விடுவிக்கப் பெறுவ தாலும் உள்ளக்கிளர்ச்சி ஏற்பட்டு அதனுலேற்படும் தாண் டல்கள் சிறு நாடிகளைச் சுருக்கமடையச் செய்யக் கூடும். சாதாரண மனிதனுக்கு இவ்வாறு அமுக்க நிலைகள் அதிகரிப் பது தற்காலிகமாகவே இருக்கும். காம்பு மண்டலமும் ஒரு சில உறுப்புக்களுக்குக் குருதியைக் கொண்டு செல்லும் சிறு நாடித் தொகுதிகளே ஏனைய உறுப்புக்களுக்குக் கொண்டுசெல் லும் நாடித் தொகுதிகளேவிட அதிகமாகச் சுருக்கமடையச் செய்யக் கூடும். இவ்வித இயந்திர இயக்க நுட்பம் சில உறுப்பு களுக்கு அதிகமாகக் தேவைப்படும். இது குருதியை வேறு போக்கில் கிருப்பிவிடுவதற்கும் துணை செய்கிறது. ஒருவர் சத்திச சிகிச்சையாலோ பலத்த காயத்தின் விளைவாகவோ அதிகமான குருதியை இழக்க நேரிட்டால், சிறுநீரகங்களி லுள்ள சிறு நாடிகளும் குடல்களிலுள்ள சிறுநாடிகளும் சுருக்கமடைகின்றன ; இதல்ை இதயத்திற்கும் மூளைக்கும் அதிகமான குருதி கிடைக்கின்றது. சிறு நாடிகளிலிருந்து நுண்புழைகளில் குருதி நுழையும் பொழுது அதன் அமுக்கம் சிறிது குறைகிறது ; அமுக்கக் குறைவால் அதன் நேர் வேகமும் குறைகின்றது. இந்த அமுக்கக் குறைவிற்கு எந்திசவகையியலின் அடிப்படையில் விளக்கம் தாலாம். ஒரு சிறு நாடி பல கிளேகளாகப் பிரிந்து முடிவடையும் குழல் எனக் கருதப்பெறின், பல கிளைகளி லுள்ள அமுக்கம் ஒரு தனிக் குழலிலுள்ள அமுக்கத்தை விடக் குறைவாக இருக்கும் என்பதை உணர்தல் மிகவும் எளிது. இக்கிளைகள் ஒன்ருேடொன்று சேர்வதர்ல் அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/38&oldid=866409" இலிருந்து மீள்விக்கப்பட்டது