பக்கம்:மானிட உடல்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 டாக்டீரியா

  • உளளணுs

படம் 15. நியூட்ரோபில்ஸால்பாக்டீரியா விழுங்கப்படுதல், திற்கு வருமாறு உறிஞ்சப்பெற்று அங்கு செரிமானம் செய்யப் படுகின்றது. எனினும், சில சமயங்களில் பாக்டீரியா வெற்றி யடைந்து உயிரணுவின் உள்ளே உயிருடன் இருப்பதும் உண்டு. ஈசினுேபிலிக்பாலிஸ் என வழங்கப்பெறும் வெள்ளை யனுக்கள் அமிலச் சாயங்களினல் கறைப்படுத்தப்பெறும் பொழுது ஒளியுடன் கூடிய சிவப்பு நுண்பொடிகள்போல் காட்சியளிக்கின்றன. இவை சாதாரணமாக நியூட்ரோபில்லை விடக் குறைவான எண்ணிக்கைகளில்தான் உள்ளன. அவற் றின் செயல் இன்ன தென்று இன்னும் தெளிவாகப் புலப்பட வில்லை. ஆனல், அவை அலெர்ஜி நிலைகளிலும், உடலினுள் புழுக்கள்போன்ற ஒட்டுண்ணிகள காணப்படும் பொழுதும் அதிக எண்ணிக்கையில் விருத்தியடைவதாகத் தெரிகின்றது. பேஸோபிலிக்’ என்ற ஒரு வகை வெள்ளே அணுக் களும் உண்டு. அவற்றின் நுண்பொடிகள் உப்புமூலச் சாயங் களினல் கறைப்படுகின்றதால் அப் பெயர் பெற்றன. நாம் அறிந்த அளவில் அவை பயன்படக்கூடிய எவ்வித செயலையும் புரிவதாகத் தெரியவில்லை. எனினும், மாஸ்டு உயிரணுக் கள் எனப்படும் ஒருசில இழையங்களில் காணப்படும் பேசோபைல்ஸ் என்ற உயிசனுக்களுடன் இவை தொடர் புள்ளதாக இருக்கக் கூடும் ; மாஸ்டு உயிரணுக்களிலுள்ள பேசோபிலிக் நுண் பொடிகளில் ஹெபாரின் என்ற ஒரு பொருள் உள்ளது. அப்பொருள் குருதியிலுள்ள உறையும் அம்சங்களுக்கு எதிராகச் செயல் புரிகின்றது. இந்தப் பலவடிவ உள்ளணுவினக்கொண்ட வெள்ளே யனுக்கள்-லூகோசைட்டிஸ்-யாவும் எலும்பு மச்சையில் சிவப்பு அணுக்கள் உண்டாகும்பொழுதே பெரும் பகுதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/48&oldid=866451" இலிருந்து மீள்விக்கப்பட்டது