பக்கம்:மானிட உடல்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi நாளுக்கு நாள் விஞ்ஞானம் வளர்ந்துகொண்டே இருக் கிறது; அதனுல் புதிய புதிய விஞ்ஞானச் சொற்களும் தான்றிய வண்ணம் இருக்கின்றன. உதாரணமாக, கார் என்பது பற்றி ஆங்கிலத்தில் உள்ள சொற்களைப் பார்க்க @ff't D. 1. Car 3. Sedan 5 Taxi 7. Truck 9. Van 2. Tourer 4. Baby car 6, Lorry 8. Bus 10, Jeep இந்தப் பத்துச் சொற்களும் காரைக் குறிப்பிடுகின்ற சொற்கள்தான். இந்த ஆங்கிலச் சொற்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையான உருவ அமைப்பும் வெவ்வேறு வகையான உபயோகமும் உள்ள ஒரு காரைக் குறிக்கிறது என்பதை யாவரும் எளிதில் புரிந்துகொள்ளல்ாம். லாரி என்பது சரக்குகளை ஏற்றிச் செல்வதற்காக உள்ள கார் என்பதும் பஸ் என்பது ஜனங்களை ஏற்றிச் செல்லும் கார் என்பதும் அனைவரும் அறிந்த விஷயமாகும். கார் பற்றிய இந்த வேறுபாடுகளை எல்லாம் குறிப்பதற் குத் தற்பொழுது தமிழில் சொற்கள் இல்லை ; ர்ேம் விரும் 鷺 விரும்பாவிட்டாலும் இந்தச் சொற்கள் எல்லாம் தமிழ்மொழியில் நுழைந்து, தமிழாகவே ஆகிவிட்டன. விஞ்ஞான நூல்கள் தமிழில் அதிகமாக வெளிவர வெளிவர, மக்கள் அதைப் படிக்கப் படிக்க, கலைச் சொற்கள் பற்றி யுள்ள இத்தகைய சில்லறைச் சிரமங்கள் நாளடைவில் குறைந்து போகும். மானிட உடல் என்னும் இந்த நூல், உடலைப்பற்றி உடல்நூல் வல்லுநர்கள் நவீன காலத்தில் ஆராய்ந்து தெரிந்துகொண்டுள்ள உண்மைகளை எல்லாம் ஜனரஞ்சக மான முறையில் எளிய நடையில் கூறுகிறது. ங்கிலத்தில் உள்ள மூல நூலைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட அனுமதி வாங்கித் தந்த, யுனைடெட் ஸ்டேட்ஸ் இன்பர்மேஷன் சர்வீசாருக்கு (U. S. T. S.) - ஐக்கிய அமெரிக்க நாடுகளின் செய்தி இலாகாவினருக்கு - எங்கள் நன்றி உரியது. சென்னை e 20-4–258 அ. லெ. நடராஜன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/7&oldid=866498" இலிருந்து மீள்விக்கப்பட்டது