உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

413


உரை : 31

துணை மதிப்பீடு


நாள்: 27.11.1973

மாண்புமிகு கலைஞர் மு.கருணாநிதி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 1973-74ம் ஆண்டுக்கான துணைமதிப்பீடுகளின் பேரில் எதிர்க்கட்சியின் தலைவர்களும், தோழமைக் கட்சியின் தலைவர்களும், மாமன்றத்தின் மாண்பு மிகு உறுப்பினர்களும் சீரிய செழுமிய கருத்துக்கள் பலவற்றை இங்கே எடுத்து வைத்திருக்கிறார்கள். இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்த நண்பர் திரு.ஜேம்ஸ் அவர்கள் இந்தத் துணை மதிப்பீடுகளை அடிப்படையாகக்கொண்டு இதிலே இருக்கிற பல விஷயங்களைப் பேச பற்றி தான் முன்வராவிட்டாலும் இதன் தொடர்பாகவுள்ள வேறுபல விஷயங்களை இந்த மாமன்றத்திற்கு உணர்த்துகிற வகையில் தன் பேச்சு அ று குறிப்பிட்டு, அவ்வாறு தம் அமையும் என்று பேச்சை அமைத்துக் கொண்டார். அவரைப் பின்பற்றிப் பேசிய பலரும் இந்தத் துணை மதிப்பீட்டில், அதிக வேறுபாடுகள், முரண்பாடுகள் காணாது, கூடுமானவரையில் இந்தத் துணை மதிப்பீட்டு மானியக் கோரிக்கைகளை வரவேற்றுப் பாராட்டி, ஆதரிக்கின்ற வகையில் தங்கள் கருத்துக்களை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

சற்றொப்ப 7 கோடி ரூபாய் அளவுக்கு இந்தத் துணை மதிப்பீடுகள் இந்த அவைமுன் வைக்கப்பட்டு, மானியத் திற்கான கோரிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளன. இவைகளில் மிக முக்கியமான பிரச்சினைகள் பலவற்றை உள்ளடக்கி, இந்த மதிப்பீடுகள் அமைந்திருக்கின்றன என்பதை ஆளுங்கட்சித் தரப்பிலிருந்தும், சில நேரங்களில் எதிர்க்கட்சித் தரப்பிலிருந்தும் எடுத்துச்சொல்லப்பட்டதை நான் வரவேற்கிறேன். பாராட்டு கிறேன். அவை எல்லாம் இந்த அரசை மேலும் ஊக்கப்படுத்தி,