உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

427


காரியங்களை நிறைவேற்றவேண்டியவர்களாக இருக்கிறோம். இதிலே அவசரப்பட்டு நடவடிக்கைள் எடுத்தால், நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் அரசின் மீது பழி சுமத்தி, உண்மையிலே தண்டிக்கப்பட வேண்டியவரேகூட, நாம் அந்தச் சம்பிரதாய முறைகளைக் கடைப்பிடிக்காத காரணத்தால், தப்பித்துக்கொள்ள வழிவகைகள் ஏற்படும். ஆகவேதான், முறை யான நிலையிலே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதைப்போலவே, கிளைவ் ஹாஸ்டலைப் பொறுத்த வரையிலும் ஐ.ஜி. அவர்கள் அதை விசாரிக்க வேண்டுமென்றும், போர்டு மெம்பர் அதை விசாரிக்க வேண்டுமென்றும் நடவடிக்கைகள் எடுப்பதற்காக ஒரு விசாரணை-மீண்டும் நீதி விசாரணை அல்ல- நீதி விசாரணை அறிக்கையின் தொடர்பாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகளுக்காக அவர்கள் நியமிக்கப் பட்டு, டி.எஸ்.பி. சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். திருச்சி யிலே இருந்த ஆர்.டி.ஓ. சஸ்பென்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

இப்பொழுது எழுகின்ற கேள்வி என்னவென்றால், முதலமைச்சரோ அல்லது அமைச்சரவையோ ராஜினாமா செய்ய வில்லை என்பதாகும். இதை நாம் மரபாக, முறையாக வைத்துக் கொள்வதாகக் கற்பனை செய்து பார்ப்போம். இன்றைக்குக் கிளைவ் ஹாஸ்டலிலே போலீசார் அத்துமீறி நடந்து கொண்டார்கள் என்ற ஒரு அறிவிப்பு வந்து, அந்த அறிவிப்பின் அடிப்படையிலே இந்த அமைச்சரவை ராஜினாமா செய்துவிட்டு இன்னொரு அமைச்சரவை வந்தால். ஆக, போலீசார் நினைத்தால், அரசைக் கவிழ்த்து விடமுடியும் என்ற நிலைமை ஏற்படும்.

மாணவர்கள் மீதோ, தொழிலாளர்கள் மீதோ, வேண்டு மென்றே போலீசார் கடுமையாக நடந்துகொண்டு, விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, அந்த நீதிபதி போலீசார் கடுமையாக நடந்துகொண்டார்கள் என்று அறிவித்த பிறகு, உடனடியாக அதையொட்டி அமைச்சரவை ராஜினாமா செய்யவேண்டு மென்றால் 4 போலீஸ்காரர்களோ அல்லது 10 போலீஸ்காரர் களோ சேர்ந்து, போலீஸ் அதிகாரிகள் நினைத்தால் ஒவ்வொரு