உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது


அமைச்சரவையாக ராஜினாமா செய்கின்ற சூழ்நிலையை உருவாக்கிக்கொண்டிருக்க முடியும். ஆகவே, அப்படிப்பட்ட மரபுகளை, நிலமைகளை வளர்ப்பது நல்லதல்ல.

ம்

தவறு செய்கின்ற அதிகாரிகள் யாராக இருந்தாலும் அது சுட்டிக்காட்டப்பட்டவுடன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டதா இல்லையா என்பதை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். அதைத்தான் நான் நேற்றையதினம் மாணவர்கள், இந்த விஷயத்திலே உன்னிப்பாகக் கவனம் செலுத்தி, அரசு எடுத்திருக்கின்ற நடவடிக்கைகளைப் பாராட்டுவதை விட்டு விட்டு, தங்களுடைய படிப்பை, எதிர்காலத்தைப் பாழாக்கிக் கொள்ளக்கூடாது என்று நான் மிகுந்த பணிவோடு நேற்றைய தினம் வேண்டுகோள் விடுத்திருக்கிறேன்.

இன்றைக்கும் கிளைவ் ஹாஸ்டல், பாளையங்கோட்டை சம்பவங்கள் பற்றி மாண்புமிகு உறுப்பினர்கள் பேசியிருக்கிற காரணத்தால் அந்த அடிப்படையில் மீண்டும் நான் மாணவர் களைக் கேட்டுக்கொள்வது, யாருடைய தூண்டுதலுக்கும் ஆளாகாமல், அவர்கள் விரைவிலே வரவிருக்கிற அரை ஆண்டுத் தேர்வு- அந்த அரை ஆண்டுத் தேர்விலே அவர்கள் பெற வேண்டிய வெற்றி-அதிலே அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டிய பயிற்சி - பிறகு அடுத்த தேர்விலே அவர்கள் பெற்றிட வேண்டிய வெற்றி இவைகளிலே தனிக்கவனத்தை மாணவர்கள் செலுத்தவேண்டுமென்று நான் மீண்டும் மீண்டும் மாணவர்களை இந்த நிதிநிலை ஒதுக்கீடு விவாதிக்கப்படுகின்ற நேரத்திலே கேட்டுக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

நம்முடைய நண்பர் திரு.ஜப்பார் அவர்கள் சென்னை யிலே கலைக்கல்லூரி, ஆண்கள் கல்லூரி பெண்கள் கல்லூரியாக மாற்றப்படுவதால் முஸ்லீம் சமுதாயத்திற்குப் பெரிய கேடு வந்துவிடும் என்பதுபோன்று ஒரு கருத்தைச் சொன்னார்கள். சிறுபான்மை சமுதாயத்திற்கு எந்தச் சிறு கேடும் வருகின்ற அளவிற்கு எந்தக் காரியமும் செய்யப்படமாட்டாது. அந்தப் பெண்கள் கல்லூரியாக மாற்றுவதில் என்ன என்ன இடர்பாடுகள் இருக்கின்றன என்பதைப்பற்றியெல்லாம் முஸ்லீம் சமுதாயத்தைச்