உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

429


து

கு

சேர்ந்தவர்கள் என்னிடத்திலோ அல்லது மாண்புமிகு கல்வியமைச்சர் அவர்களிடத்திலோ விவாதித்து இதற்கு எப்படிப் பட்ட முறையிலே வழிவகைகளைக் காணலாம் என்று சிந்தித்து முடிவிற்கு வர அரசு தயாராக இருக்கிறது. எதையும் அவசரப் பட்டு எந்தக் காரியமும் செய்வதாக இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறுபான்மையோருக்குச் சில இடங்களிலே கொடுமை களும் அநீதிகளும் இழைக்கப்படுகின்றன. அதற்கு நீதி விசாரணை வேண்டுமென்று சொன்னார்கள். அப்படிப்பட்ட இடங்களிலே நானும் தலையிட்டு ஆங்காங்கு இருக்கிற மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனும், முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்தவர்கள், முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்த பெரியவர்கள் ஆகியவர்களுடனும் கலந்துகொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தஞ்சை மாவட்டத்திலே சோழவரத்திலே சாதி இந்துக் களுக்கும்- கட்சி சார்பற்ற முறையிலே நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று திரு.தங்கமணி அவர்கள் சொன்னார்கள்- அரிசனங்களுக்கும் ஏற்பட்டிருக்கிற மோதல்கள் தவிர்க்கப்பட வேண்டுமென்று எடுத்துக்காட்டினார்கள். இவைகள் குறிப்பாக என்னுடைய கவனத்திற்குக் கொண்டுவரப்படவில்லையென்றா லும் இன்றைக்கு இந்த அவைக்கு திரு.தங்கமணி அவர்கள் எடுத்துச் சொன்ன அடிப்படையிலே அவற்றைப் பற்றி இந்த அரசு தனிக் கவனம் செலுத்தும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கட்டபொம்மன்

போக்குவரத்து நிறுவனம் ஒரு கார்ப்பரேஷனாக இன்றைக்கு மாறுகிற காரணத்தினால் அங்கே உள்ள ஊழியர்களுடைய ஊதியமும் பணிமுறைகளும் பாதிக்கப் படும் என்ற அச்சத்தை திரு. சுவாமிதாஸ் அவர்கள் வெளி யிட்டார்கள். கட்டபொம்மன் கார்ப்பரேஷனாக அந்த பேருந்து நிறுவனம் மாறுகின்ற காரணத்தினால் அந்த ஊழியர்களுடைய ஊதியமோ பணிமுறைகளோ நிச்சயம் பாதிக்கப்படமாட்டாது என்ற உறுதியை நான் தெரிவித்துக்கொள்கிறேன். அப்படிப்