உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

432

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது


உரை : 33


மாநில ஆட்சித் தலைவர்கள்

நாள் : 01.04.1974

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : பேரவைத் தலைவர் அவர்களே, பரிவுரையின் மேல் பின்வரும் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்:

“நிதிக் கோரிக்கை எண் 9 - மாநில ஆட்சித் தலைவர், அமைச்சர்கள், தலைமையிடப் பணியாளர்கள் என்ற தலைப்பின் கீழ் ரூ. 11,32,66,300-க்கு மேற்படா தொகை அரசுக்கு வழங்கப் பட வேண்டும்."

பேரவைத் தலைவரவர்களே, மன்றத்தின் முன்னால் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மானியத்தின் கோரிக்கைகளை மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரும் மிக உன்னிப்பாகக் கவனித்து அரிய கருத்துக்கள் பலவற்றை எடுத்துக் கூறியிருக்கின்றார்கள். அவர்கள் அனைவருக்கும் என்னுடைய இதயமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

விவாதத்தைத் தொடங்கி வைத்த நண்பர் செழியன் அவர்கள், தலைமைச் செயலகத்திலே பணியாற்றுகின்ற அலுவலர்களின் வசதிகள் இவைகளெல்லாம் நல்லமுறையில் அமைக்கபட வேண்டுமென்பதையும், காற்றோட்டமான இடங்களில் அவர்கள் இருந்து அலுவல் புரிவதற்கான வாய்ப்புகளை அரசு உருவாக்கித்தரவேண்டுமென்பதையும் எடுத்துக்காட்டினார்கள். நான் இந்த முறையீட்டை வைத்த நண்பர் செழியன் அவர்களுக்குத் தலைமைச் செயலக அலுவலர்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏனென்றால் தலைமைச் செயலகம் இந்த இடத்திலே யிருந்து மாற்றப்பட்டு வேறொரு இடத்திலே வசதியாக தலைமைச் செயலகம் கட்டப்படவேண்டுமென்கின்ற ஒரு கருத்து அரசின்பால் நிலவி, அந்தச் கருத்து இங்கொன்றும் அங்கொன்று மாக வெளிவந்தபொழுது அப்படிப்பட்ட ஒரு பெரிய கட்டிடம்