உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது


வேளாண்மைத்துறை அமைச்சர் சென்னையில் தங்கிய நாட்கள் 301. வெளியூர் சென்ற நாட்கள் 64.

ர்

உள்ளாட்சித் துறை அமைச்சர் சென்னையில் தங்கிய நாட்கள் 202. வெளியூர் சென்ற நாட்கள் 163. அவர் ஒருவர்தான் கொஞ்சம் அதிகம் போயிருக்கிறார். ஏனென்றால் உள்ளாட்சித் துறை அமைச்சர்.

உணவு கூட்டுறவுத் துறை அமைச்சர் சென்னையில் தங்கிய நாட்கள் 270. வெளியூர் சென்ற நாட்கள் 95.

தொழிலாளர் நல அமைச்சர் சென்னையில் தங்கிய நாட்கள் 224. அதுவும் ஆச்சரியம். வெளியூர் சென்ற நாட்கள் 141.

மின்வாரிய அமைச்சர் சென்னையில் தங்கிய நாட்கள் 261. வெளியூர் சுற்றுப் பயண நாட்கள் 104.

போக்குவரத்து அமைச்சர் சென்னையில் தங்கிய நாட்கள் 243. வெளியூர் சென்றது 122 நாட்கள்.

அறநிலைய அமைச்சர் சென்னையில் தங்கியது 216 நாட்கள். வெளியூர் சென்றது 149 நாட்கள்.

ஆக, இந்தக் கணக்கைப் பார்த்தால் 200-க்கு மேற்பட்ட, 250-க்கு மேற்பட்ட நாட்கள் சென்னையில் தங்கி நாங்கள் பணியாற்றி வருகிறோம். பொத்தாம் பொதுவிலே அமைச்சர்கள் சென்னையில் தங்குவதில்லை; நாங்கள் இவர்களைப் பார்க்கவே முடிவதில்லை என்று கூறுவது பொருத்தமற்றது என்பதற்காகத் தான் இந்த விளக்கத்தை அளித்தேனே அல்லாமல் வேறு அல்ல.

நண்பர் நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி அவர்களும், திரு. கே.டி.கே. தங்கமணி அவர்களும் அமைச்சர்களுக்கு எழுதப்படுகின்ற கடிதங்களுக்கு அமைச்சர்களே பதில் எழுதவேண்டும் என்று சொன்னார்கள்.

இப்பொழுது இருக்கிற ஏற்பாடு உடனடியாக கடிதம் வந்து சேர்ந்தது என்று அதிகாரிகள் சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பதில் மூலம் தெரிவிக்கின்றார்கள். இனிமேல் அதைத் தொடர்ந்து விவரங்களைப் பார்த்து, அமைச்சர்கள் சட்டமன்ற