உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

451


உறுப்பினர்களுக்குக் கடிதம் எழுதுகின்ற முறை மாண்புமிகு உறுப்பினர் கே.டி.கே. தங்கமணி அவர்களும், நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி அவர்களும் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இன்று முதல் அமுலுக்கு வரும் என்பதையும் நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

6

அமைச்சர்கள் இடைத் தேர்தலில் ஈடுபடலாமா, இடைத் தேர்தலில் பிரசாரம் செய்யவரலாமா? வெட்டுத் தீர்மானத்தில் அதைத்தான் கே.டி.கே. தங்கமணி அவர்கள் கொடுத்திருக் கிறார்கள். வராமல் கூட இருந்து விடலாம். ஆனால், அவர்கள் ஜாக்கிரதையாக நான் எங்கே சொல்லி விடப்போகிறேனோ என்று, கேரள அமைச்சர் இங்கே வரலாம். ஆனால், இந்த மாநிலத்தில் நம்முடைய மாநில அமைச்சர்கள் இடைத் தேர்தலுக்குப் போகலாமா என்று கேட்டுவிட்டார்கள்.

வெட்டுத் தீர்மானத்தை எழுதிய பிறகு யாரோ போய்ச் சொல்லியிருக்கிறார்கள் என்று கருதுகிறேன்.

கோவிந்தன் நாயர் அவர்கள் கோவைக்கு வந்து அமைச்சர்கள் தேர்தலுக்கு வரக்கூடாது என்று இங்கே பேசிய செழியன் அவர்கள் ஆரம்பத்திலே பேசிய அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

கோவிந்தன் நாயர் அவர்களும், நண்பர் எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களும், கோவை செழியன் அவர்களும் அந்தக் கூட்டத்தில் பேசியிருக்கிறார்கள். அதிலே கோவிந்தன் நாயர். எம்.ஜி.ஆர். இந்தியாவின் சரித்திரக் கதாநாயகன் என்று கூட பேசியிருக் கிறார்கள்.

க்

ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் கேரள மாநிலத்திலிருந்து ஒரு அமைச்சர் தமிழகத்திற்கு வந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். சரி அந்த மாநிலத்திலிருந்துதானே வந்தார். அவர் இங்கே பிரசாரத்திற்காகத் தானே வந்தார். அமைச்சர் என்ற அளவில் வரவில்லையே என்று சொல்கி றார்கள்.

செழியன் அவர்கள் பேசும்போது அமைச்சர் வந்தால் பின்னால் போலீஸ் பரிவாரங்கள் வருகிறார்கள். மக்கள் மந்திரி