உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது




சென்னை மாநகரில் தற்போதுள்ள தண்ணீர்த் தட்டுப்பாட்டைச் சமாளிப்பதற்காக உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டு, மொத்தம் 85.25 இலட்சம் ரூபாய், கடனாகவும், மானியமாகவும் மாநகராட்சிக்கு வழங்க இத்துணை மதிப்பீடுகளில் நிதி ஒதுக்கம் செய்யப்பட்டுள்ளது. வீராணம் திட்டத்திற்கு சென்னையை நோக்கிப் போடப்பட்டு வரும் குழாய்களைப் பயன்படுத்திக்கொண்டு, பாலாற்றுப் படுகையிலிருந்து கிடைக்கும் நீரை சென்னைக்குக் கொண்டு வருவதற்கான இடைக்கால விரைவுத்திட்டம் ஒன்றுக்கு அரசு அண்மையில் அனுமதி வழங்கியது. இதற்கென மொத்தம் 1.12 கோடி ரூபாய் இத்துணை மதிப்பீடுகளில் இடம்பெற்றுள்ளது. இதுவன்றி குடிநீர்த் தட்டுப்பாட்டை நீக்க பல்வேறு நகராட்சிகளுக்கு மொத்தம் 28.96 இலட்சம் ரூபாய் வழங்குவதற்கான நிதி ஒதுக்கம் செய்யப்பட்டுள்ளது.

பெருகிவரும் நமது வரவு-செலவுகளுக்கு ஏற்ப, எதிர்பாராச் செலவு நிதியின் அளவையும் 10 கோடி ரூபாயிலி ருந்து 20 கோடி ரூபாயாக உயர்த்த, மன்றத்தின் ஒப்புதல் அண்மையில் பெறப்பட்டது. இதற்கும் இந்த மதிப்பீடுகள் வகை செய்கின்றன.

ஊனமுற்றோர் நல்வாழ்வுத் திட்டத்தின் பகுதியாக, முட்டுக்காட்டில் புதிதாக நிறுவப்பட்டு வரும் தொழிற்சாலைக்கு 14.38 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கமும் கண்ணிழந்தோர் பள்ளிகள் நான்கையும், செவிடர் பள்ளிகள் ஐந்தையும், 4.71 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்க அடையாள நிதி ஒதுக்கமும், 555 செவிக்கருவிகள் வழங்குவதற்காக 3.04 ள் இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கமும், பல்வேறு பயிற்சித் திட்டங்களுக்கான செலவுகளும் இம் மன்றத்தின் ஒப்புதலுக்காக இத்துணை மானியக் கோரிக்கைகளில் இடம்பெற்றுள்ளன.

ய்

1975ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 1ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வரும் என்று இப்போதுஅறிவிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வுகளுக்கு இந்த ஆண்டு 4.08 கோடி ரூபாய் செலவிட இந்தத் துணை மதிப்பீடுகள் வகை செய்கின்றன. அரசு அலுவலர்களுக்கு வீடுகள் கட்டுவதற்காக 25 இலட்சம் ரூபாய் கூடுதல் கடன் தொகையும், விழா முன் பணங்களுக்காக இரண்டு கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கமும், 56ஆவது மானியத்தில் இடம் பெற்றுள்ளன.