உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

ம்

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது

மெழுகுவர்த்தி குறைந்த செலவில் கிடைத்தாலும், மின் விளக்கு அணைந்தவுடன்தான் கடையிலே ஓடிப்போய் மெழுகுவர்த்தி வாங்கி ஏற்றி வைக்கும் நிலையில், குறைந்த செலவில் நடக்கக் கூடிய காரியத்தில் கூட இப்படி நடைபெறுகிறது. 14-15 மாநிலங்களிலும் இந்திய சர்க்கார் கவர்னரை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும், குறிப்பாக தமிழகத்தைப் பொறுத்தவரையில் 10 லட்சம் ரூபாய் செலவழிப்பது நியாயம்தானா? மாநிலத்தில் குழப்பம் வந்தால் என்ன செய்வது என்று கேட்கலாம். பக்கத்து மாநிலமாகிய கேரளத்தை உதாரணம் காட்டலாம், வேண்டுமானால் டில்லியில் 4-5 கவர்னர்களை வைத்துக்கொண்டு, குழப்பம் நேரிட்டால். குழப்பங்களை சமாளிக்க அந்த மாநிலத்திற்கு அனுப்பி விடுங்கள் என்று மாநில சர்க்கார் மத்திய சர்க்காருக்கு எடுத்துச் சொல்லக்கூடாதா என்று கேட்கிறேன். கவர்னர் நமது மாநிலத்துக்கு தேவையில்லை என்று சொன்னால், கவர்னர் வேண்டாமென்று கூறுவது அரசியல் சட்டத்திற்கு விரோதம் என்று கூறுகிறார்கள். அரசியல் சட்டத்துக்கு விரோதம் என்ற கூறி எத்தனையோ பெரும் பொறுப்புகளிலிருந்து நழுவி விடக்கூடாது, வேண்டுமானால் அரசியல் சட்டத்தை மாற்றுகிற துணிவு ஏற்படவேண்டும். அரசியல் சட்டம் மாற்றவே கூடாத ஒன்றல்ல - மாற்றவே முடியாத ஒன்றுமல்ல.

ம்

Mr. SPEAKER : This House cannot amend the Constitution.

கலைஞர் மு. கருணாநிதி : ஆகவே மாநில சர்க்கார் மத்திய சர்க்காரிடத்திலே இந்த கவர்னர் பதவியினால் ஆண்டுதோறும் இழக்கின்ற 10 லட்சம் ரூபாயை இழக்கக் தயாராயில்லை. ஆகவே கவர்னர் பதவி தேவையில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கவேண்டுமென்று இந்த மான்ய வெட்டுப் பிரேரணை மூலமாகக் கேட்டுக்கொண்டு என் உரையை முடித்துக் கொள்கிறேன். வணக்கம்.

கலைஞர் மு. கருணாநிதி : சட்டமன்றத் தலைவர் அவர்களே, நமது கல்வி அமைச்சர் அவர்களுடைய தமிழ் ஆர்வம், இன்றைய தினம் மாணவர்களிடையே பெருத்த வேதனையை உண்டாக்குகிற அளவுக்கு குறைந்து விட்டது என்பதை