உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

49

கண்டிக்கிற அளவில் கோவையிலும், பொள்ளாச்சியிலும் உள்ள மாணவர்கள் அடையாள மறியலில் ஈடுபட்டிருக்கிற இந்த நேரத்தில், கல்வி மான்யக் கோரிக்கைமீது எங்கள் கட்சி சார்பிலே, கொடுக்கப்பட்டிருக்கிற வெட்டுப் பிரேரணையின் மீது சில வார்த்தைகளை இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன்.

ஏறத்தாழ 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிற இந்த மான்யம் வரவேற்கத்தக்கது என்றாலும், 25 கோடி ரூபாய் செலவழிக்கப்படுகிற இந்த நிறுவனத்தில் இயக்குநருக்குக் கீழே துணை இயக்குநர்கள் 4 பேர்கள்தான் இருக்கிறார்கள் என்பது பரவலாக கல்வி மக்களிடத்தில் செழிப்படைய வேண்டும் என்ற திட்டத்தை விரைந்து நிறைவேற்றக்கூடியதாக அமையவில்லை என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். ஆரம்பக்கல்வி, உயர்தரக் கல்வி இவைகளைப் பிரித்து அப்படிப்பட்ட கட்டங்களுக்குக்கூட தனியாக இயக்குநர்கள் அமைக்க வேண்டும் என்கின்ற என்னுடைய எண்ணத்தை நான் தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். குறிப்பாக தமிழிலே ஆர்வம் உள்ளவர்களும், தமிழிலே புலமை மிக்கவரும் தமிழ்பற்றி ஆராயவும், திருத்தவும் வேண்டும். ஆனால் தமிழ் விடைத்தாள்களை திருத்துவதற்கான பொறுப்புகளிலேகூட அவர்கள் அமைக்கப்படுவதில்லை என்கின்ற குற்றச்சாட்டை நான் இங்கே உதாரணத்தின் மூலம் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கோவையில் தமிழ் விடைத்தாள்களை அதுவும் எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் விடைத்தாள்களை திருத்துவதற்கான பெரிய பொறுப்பில் கோவையில் உள்ள அரசாங்க உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கணக்கு பி.டி. அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அதேபோல் கொங்கணி உயர் நிலைப் பள்ளியில் சமூக இயல் ஆசிரியர் தமிழ் விடைத்தாள்களைத் திருத்துவதற்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதும் இதற்கு உதாரணமாகும் என்று நான் கூறுகிறேன்.

டெக்ஸ்ட் புக் கமிட்டிக்கு அனுப்பப்படுகிற புத்தகங்கள் பற்றி ஓரிரண்டு உதாரணம் கூற விரும்புகிறேன். நேரம் அதிகம் இல்லாத காரணத்தினால் நான் அதை விளக்கமாகக் கூறாமல், சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 'குறள் நெறிக் கதைகள்' என்கின்ற

3-க.ச.உ.(மா.து.நி-பா.1)