உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது

ஆழமான கிணற்றைத் தேடிக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான அபலைகளை, அனாதைகளை ஏழை உழவர்களைக் காப்பாற்ற இந்த அரசு முன்வரவேண்டு மென்றுதான் கேட்டுக்கொள்கிறேன்.

ன்

இந்த மானியத்திலே, கால்நடை வளர்ச்சியைப் பற்றிப் பலர் எடுத்துக் கூறினார்கள். அவைகளைப் பற்றி என்னுடைய கருத்தைத் தெரிவிக்கும் நேரத்தில், "இந்தியக் கால்நடைகளின் எண்ணிக்கை பெரிதேயன்றி அவற்றின் தரம் உயர்ந்ததன்று. இந்தியப் பசு சராசரி 413 ராத்தல் பால் தருகிறது. பிற நாடுகளில் 2,000 முதல் 7,000 ராத்தல் வரை பால் தரும் பசுக்கள் உள்ளன. பெரும்பான்மையும் பயனற்ற கால்நடைகளாக இருப்பதால் அவை உழவர்களுக்குப் பாரமாகவே உள்ளன" என்று இந்த மன்றத்தில் வீற்றிருக்கிற டாக்டர் பா. நடராசன் அவர்கள் ஒரு நூலில் குறிப்பிட்டிருப்பதை எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

அடுத்த மாதம் இந்தியாவுக்கு விருந்தினராக வர இருக்கின்ற லார்டு லிட்டன் என்ற பெரியவர் “ஹவுஸ் ஆப் லார்ட்சில்” மார்ச் மாதம் 5-ஆம் தேதியன்று பேசியிருக்கும் பேச்சைக் குறிப்பிட விரும்புகிறேன்.

"இந்திய மக்களது நிலங்களில் உலா வந்திடும் பல்லாயிரக் கணக்கான மிருகங்கள் கொல்லப்பட இந்திய மக்களது மத நம்பிக்கை அனுமதித்தால் இந்தியாவின் உணவுப் பிரச்சினையின் பெரும் பகுதி நிவர்த்தி செய்யப்படலாம்” என்று அவர் பேசியிருக்கிறார். இதை நான் எடுத்துச் சொல்லுகின்ற நேரத்திலே, 'பசுக்களைக் கொள்வதா? கால்நடைகளைக் கொல்வதா? என்று என்று என்மீது சிலர் பாய்ந்திடக்கூடும். அவர்களுக்கு நான் ஒன்றை எடுத்துக்காட்ட விரும்புகிறேன். இந்திய சர்க்காருடைய செலவில், விவசாய முறைகளையும், கால்நடைகளையும் பற்றி அறிந்து வருவதற்காக அமெரிக்கா சென்று திரும்பி, அருமையான புத்தகம் ஒன்றையும் எழுதியிருக்கிறார், பழைய கோட்டையைச் சேர்ந்த கனம் பார்வதி அர்ச்சுனன், எம்.எல்.ஏ., அவர்கள். அவர்கள், ‘எனது, வெளிநாட்டு அனுபவம்' என்ற நூலில்.