உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

67

'அமெரிக்காவில் பாலுக்குத் தகுதியற்றதாக இருக்கும் பசுக்களையெல்லாம் ஒழித்து விடுகிறார்கள். அதனால் அந்த விவசாய மக்கள் பொருளாதாரத் துறையில் முன்னேறுவதற்கு இந்த முறை ஓரளவுக்குத் துணை புரிகிறது." என்று கூறிவிட்டு அடுத்து அம்மையாருக்கு இந்தியாவின் மத நம்பிக்கை பற்றிய பயம் வருவதன் காரணமாக -

“சர்க்கார் இது பற்றி நன்கு சிந்தித்து வீணாகும் நாட்டின் பொருளாதார விரயத்தைத் தடுக்க வேண்டும். பசுக்களைத் தெய்வம் எனத் துதிக்கும் நமது நாட்டில் இது விஷயத்தில் குறிப்பாகவும் ஆழ்ந்தும் சிந்தித்து ஒரு முடிவை எடுக்க வேண்டும். அப்போதுதான் விவசாயத் துறையில் நாம் கணிசமான அளவு முன்னேற்றத்தைக் காண முடியும்”, என்று அம்மையார் அவர்கள் அந்த நூலில் குறிப்பிட்டிருக்கிறார்கள் இதையும் மனத்திலே வைத்து, இந்த நாட்டின் விவசாயி களுடைய நிலை உயர கால்நடை வளர்ச்சி எவ்வளவு இன்றியமையாதது என்பதை உன்னிப்பாக பார்த்து, எதிர்க்கட்சி சார்பில் எடுத்துரைக்கப்பட்ட - குறைந்தபட்ச கூலி நிர்ணயம் · விளைபொருள்களை விளைவிக்க நிர்ணயம் செய்யவேண்டும் என்பது பற்றிய கருத்துக்களையெல்லாம் மனத்தில் கொண்டு செயல்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டு என்னுடைய உரையை முடித்துக் கொள்கிறேன். வணக்கம்.