உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

71

8

நம்முடைய அமைச்சர் கக்கன் அவர்கள் தந்திருக்கிற இந்தப் புத்தகத்தில், ஹரிஜனங்களுடைய முன்னேற்றம் ஏறத்தாழ 8 வகையிலே எப்படி முன்னேறியிருக்கிறது என்பதற்கான எழிலோவியம் தீட்டப்பட்டிருக்கிறது. அப்படி ஹரிஜனங் களுடைய பள்ளிக்கூடம் எப்படி இருக்கிறது என்று இந்தப் படத்தைப் பார்த்து புரிந்து கொள்ளுகிறவர்கள், நேர்த்தியான கட்டிடம் என்றுதான் கூறுவார்கள். ஆனால் பல இடங்களிலே இப்படிப்பட்ட ஓட்டுவில்லைக் கட்டிடம் இல்லாமல் கூரைக் கட்டிடத்தில் கற்றுத் தருகின்ற நிலையும், திண்ணைப் பள்ளிகளாக இருக்கக்கூடிய நிலையிலும் இருக்கின்றது. அது மாற்றப்படவேண்டும். கல்விக்கூடங்களில் கல்வி பயிலுகிற ஹரிஜன மாணவர்கள், பின் தங்கிய மாணவர்கள் அவர்கள் கல்வி பயிலுகிற நேரத்தில் ஆபத்து விளைவிக்காத கட்டிடங்கள், விபத்துக்களை அளிக்காத கட்டிடங்கள் தேவை என்று இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

ஹரிஜன நல விடுதிகளில் 93 விடுதிகளை அரசினர் ஏற்று நடத்துகிறார்கள், மற்றவைகளை தனிப்பட்டவர்கள் நடத்துகிறார்கள் என்றும் சொல்லப்பட்டது. சென்ற ஆண்டு விவாதத்திற்கு பதில் அளித்த அமைச்சர் அவர்கள் மற்ற விடுதிகளை அரசினர் எடுத்து நடத்தாததற்குக் காரணம் அந்த விடுதிகளில் ஊழல்கள் எதுவும் இல்லாது நடைபெறுகிறது, ஆகையால் நாங்கள் ஏற்று நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்டார்கள். ஆனால் எல்லா விடுதிகளும் ஊழல் இல்லாமல் ஒழுங்காக நடைபெறுகிறது என்று சொல்ல முடியாது. சில குறிப்பிட்ட விடுதிகளை நான் இங்கே எடுத்துச் சொல்ல முடியும். விவரம் கேட்டால் அவைகளை அரசாங்கத்திற்கு விளக்க முடியும். உதாரணத்திற்கு ஒன்று சொல்லுவேன், குறிஞ்சிப்பாடியிலுள்ள ஹரிஜன நல விடுதி ஊழல் நிறைந்ததாக ஆகிவிட்ட காரணத்தினால், உடனடியாக அரசினர் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளெல்லாம் எழுதி, கடைசியில் மந்திரிகள் கைக்கு வந்த நேரத்தில் கைவிடப்பட்டது என்ற செய்தி உள்ளபடியே சோகத் தகவல்தான் என்பதை இங்கே குறிப்பிடாமல் இருக்க முடியாது.

க்