உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது

ஹரிஜன வீட்டுப் பெண் குழந்தைகளுக்கு உடை வழங்குகிற திட்டம் இருக்கிறது. ஆனால் ஆண் பிள்ளைகளுக்கு உடை வழங்குகிற திட்டம் இல்லை என்பதை நாங்கள் மாத்திரமல்ல, ஆளும் கட்சியில் இருக்கிற உறுப்பினர்களும் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

டு

ம்

அடுத்து, இந்தத் துறையில் வீட்டு மனைகள் வழங்குகிற திட்டம். இவர்கள் வாழ்வதற்கான மனைகளை ஆர்ஜிதம் செய்வதற்காக இன்றைய தினம் திட்டமிட்டு அந்த வகையிலே எவ்வளவு மனைகளை ஆர்ஜிதம் செய்திருக்கிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். எத்தனை காலனிகளுக்கு என்று சொன்னால் ஒருவேளை தருகின்ற புள்ளிவிவரம் குறைவாகத் தோன்றி தேர்தல் நேரத்தில் பயன்படாமல் போய்விடும் என்று கருதினார்களோ என்னவோ, எத்தனை மனைகள் என்ற கணக்கைத் தந்திருக்கிறார்கள். 1961-62ல், 18,769 வீட்டு மனைகள் ஆர்ஜிதம் செய்யப்பட்டது என்றும், 19,227 மனைகள் அளிக்கப்பட்ட வீட்டு மனைகளின் மொத்த எண்ணிக்கை என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எத்தனை காலனிகளுக்கு வழங்கப்பட்டது என்று தெரியவில்லை. இடையிடையே ஏற்படுகிற பொறுப்பற்ற செயலை நான் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. அரக்கோணம் தாலுகாவின் அருகில் பாடி என்ற கிராமம் இருக்கிறது. பழங்காலத்தில் அது ஒரு ஜமீன் கிராமம். அந்த கிராமம் இன்றைய தினம் அரசினர்களுக்குச் சொந்தமாக ஆக்கப்பட்டிருக்கிற கிராமம். அந்த கிராமத்தில் 12 ஏகரா நிலம் ஒரு வருட காலமாக ரெவின்யூ டிபார்டுமெண்டின் கீழ் இருந்துவருகிறது. அந்த 12 ஏகரா நிலத்தைத் தங்களுக்கு ஆர்ஜிதம் செய்து தரவேண்டுமென்று அங்கிருக்கிற ஹரிஜன மக்கள் மனுப்போட்டு கோரிக்கை விடுத்திருந்தார்கள். ஆனால், அந்த ஊரிலுள்ள மணியக்காரர் அந்த நிலம் தனக்குத்தான் சொந்தம் என்று வாதாடி, இல்லை என்று சொல்லி தங்களுக்குத் தேவை என்று வேண்டுகோள் விடுத்த ஹரிஜன மக்கள் 50 பேரை போலீஸ்காரர்கள் பிடித்து சிறைச் சாலையிலே அடைக்கச் சொல்லியிருக்கிறார்கள். இது ஒன்று இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சம்பவமாகும். இது எப்படி இருக்கி ருக்கிறது என்றால், சர்க்கார் நிலத்தை ஆர்ஜிதம் செய்யவேண்டும் என்ற

ன்