உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

498

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது


இதுவரை நடைமுறையில் இருந்த இனச்சுழற்சி முறையில் Roster, முதல் பத்து இடங்களில் மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஓர் இடம் என்று இருந்ததைத் தற்போது ஆதிதிராவிடர்களுக்கு இருப்பதைப் போல, இரண்டு இடங்கள் என்று மாற்றி அமைத்துள்ளதும் இந்த ஆட்சியிலே தான் என்பதை நான் இங்கே ஞாபகப்படுத்த விரும்புகிறேன், (மேசையைத் தட்டும் ஒலி).

ல்

இந்தத் தமிழக சட்டமன்ற சரித்திரத்தில் அரசுப் பணியிடங்களில் இட ஒதுக்கீடு சம்பந்தமாக வைக்கப்பட்டுள்ள முதலாவது வெள்ளை அறிக்கை இதுதான் என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் (மேசையைத் தட்டும் ஒலி).

அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியிடங்கள் A, B, C,D. என்று நான்கு, தொகுதிகளாக - Groups பிரிக்கப்பட்டுள்ளன. 'A' தொகுதி - Groups என்பது அடிப்படைச் சம்பளமாக மாதம் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாயும் அதற்கு மேலும் பெறுகின்றவர்கள். உதாரணமாக D.R.O., கூடுதல் S.P. கண்காணிப்புப் பொறியாளர் Civil Surgeon பல்கலைக் கழக இணைப்பேராசிரியர், துணைச் செயலாளர் போன்ற பதவிகள் 'A' தொகுதியைச் சார்ந்தவை.

'B' தொகுதி என்பது அடிப்படைச் சம்பளமாக மாதம் ஒன்றுக்கு 5000 ரூபாய்க்கு மேல் 10,000-க்குக் கீழ் பெறுபவர்கள் உதாரணமாக, Deputy Collector D.S.P. Assistant Civil Surgeon, Commercial Tax Officer போன்ற பதவிகள் 'B' தொகுதியைச் நதவை.

சார்

'C' தொகுதி என்பது அடிப்படைச் சம்பளமாக மாதம் ஒன்றுக்கு 2,610 ரூபாய்க்கு மேல் 5,500-க்குக் கீழே பெறுபவர்கள் 'C' தொகுதியைச் சேர்ந்தவர்கள். உதாரணமாக Junior assistant, typist, record clerk, assistant commercial tax officer, sub-inspector போன்றவை 'C' தொகுதியைச் சார்ந்தவை.

ம்

'D' தொகுதி என்பது அடிப்படைச் சம்பளமாக மாதம் ஒன்றுக்கு 2,610 ரூபாய்க்குக் கீழ் பெறக்கூடியவர்கள். உதாரணமாக, அலுவலக உதவியாளர்கள், அதாவது ப்யூன்கள் Sanitary Workers, Watchman போன்றவை 'D' தொகுதியைச் சார்ந்தவை.