கலைஞரின் சட்டமன்ற உரைகள்
499
'A' தொகுதியிலே 1-1-1999 அன்றைய நிலவரப்படி 4,588 பேர் அரசுத்துறைகளிலும் 3,660 பேர் பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவற்றிலும் ஆக மொத்தம் 8,248 பேர் இருக்கிறார்கள்.
'A' தொகுதியிலே மொத்தம் உள்ள 8,248 பேரில், ஆதிதிராவிடர்கள் 591 பேர், பழங்குடியினர் 20 பேர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 665 பேர், பிற்படுத்தப் பட்டோர் 4,744 பேர்.
'A' தொகுதியில் அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 1-4-1989 முதல் நிரப்பப்படாமல் உள்ள பின்னடைவுக் காலிப் பணியிடங்கள்; ஆதிதிராவிடர்கள் 168 பேர், பழங்குடியினர் 5 பேர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 97 பேர்.
'B' தொகுதியில் 1-1-1999 அன்றைய நிலவரப்படி 1,69,682 பேர் அரசுத் துறைகளிலும், 24,297 பேர் பொதுத் துறை நிறுவனங்கள் போன்றவற்றிலும் ஆக மொத்தம் 1,93,979 பேர் இருக்கிறார்கள். 'B' தொகுதியில் மொத்தம் உள்ள 1,93,979 பேரில், ஆதிதிராவிடர்கள், 24,910 பேர். பழங்குடியினர் 821 பேர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 30,239 பேர், பிற்படுத்தப்பட்டோர், 1,07,686 பேர்.
'B' தொகுதியில் அரசுத் துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் 1-4-1989 முதல் நிரப்பப்படாமல் உள்ள பின்னடைவு காலிப்பணியிடங்கள்; ஆதிதிராவிடர்கள் 1545 பேர். பழங்குடியினர் 130 பேர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 542 பேர்.
'C' தொகுதியில் 1-1-1999 நிலவரப்படி 4,24,131 பேர் அரசுத் துறைகளிலும் 2,14,302பேர் பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவற்றிலும், ஆக மொத்தம் 6,38,433 பேர் இருக்கின்றார்கள். 'C' தொகுதியில், மொத்தம் உள்ள 6,38,433 பேரில், ஆதிதிராவிடர்கள் 1,04,368 பேர், பழங்குடியினர் 4992 பேர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 99,129 பேர், பிற்படுத்தப் பட்டோர் 3,20,537 பேர் 'C' தொகுதியில் அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 1-4-1989 முதல் நிரப்பப்படாமல் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்கள்