கலைஞரின் சட்டமன்ற உரைகள்
501
அ
த
ஐந்தாண்டுகளுக்கு உள்ளே என்றால் இந்த ஆண்டிலேயே இந்த முயற்சி ஆரம்பம் ஆகிவிடும் என்பதையும் அந்த முயற்சிக்கு எந்த அதிகாரி முட்டுக்கட்டையாக இருந்தாலும் அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் நான் தெரிவித்து, இந்த முயற்சியை நாம் முனைந்து மேற்கொள்கின்ற காரணத்தால் ஏற்கெனவே இருக்கின்ற இட ஒதுக்கீட்டிலே ஏதாவது ஊனம் ஏற்படும் என்று யாரும் கருதத் தேவையில்லை. அந்த இ ஒதுக்கீடு அப்படியே தொடரும். முன்னேறிய சமுதாயத் திற்குள்ள இடங்கள், பிற்படுத்தப்பட்டோருக்குள்ள இடங்கள், இவையெல்லாம் அப்படியே தொடரும். அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. இது போய் அதைப் பாதிக்காது என்பதை, முன்னேறிய சமுதாயத்தினருக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
L
ஆக மொத்தம் 11,264 பின்னடைவு காலிப் பணியிடங்களையும் - மீண்டும் சொல்கிறேன் மீண்டும் சொல்கிறேன் - ஐந்தாண்டு களுக்குள் நிரப்ப இந்த அரசு உறுதியளித்திருக்கிறது. ஓராண்டுக்குள் நிரப்பிவிட்டால் என்ன என்றெல்லாம் கேட்கப்பட்டது. இவையெல்லாம் ஆர்வத்தின் காரணமாகக் கேட்கப்படுகின்ற கேள்வியே அல்லாமல் வேறல்ல. ஓராண்டுக்குள் முடிந்தால் எங்களுக்கும் திருப்திதான். அந்த முயற்சியிலே நாங்கள் முனைந்து ஈடுபடுவோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். 5 ஆண்டுகள் என்பது 4 ஆண்டுகளில்கூட ஆகலாம். ஏன் 5 ஆண்டுகள் என்று சொல்லிவிட்டு, 4 ஆண்டுகளுக்குள் நிரப்பி விட்டாய் என்று யாரும் கேட்கக்கூடாது. அதற்குள் நிரப்பினாலும் நிரப்பிவிடுவோம். கழக அரசு பொறுப்பேற்றுக்கொண்ட பிறகுதான் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு என்று சிறப்பு நியமன நடவடிக்கை Special Recruitment Drive மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதையும் நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).
உதாரணமாக, 1997ஆம் ஆண்டில் கல்லூரி ஆசிரியர் களுக்கான 100 பணியிடங்களை சிறப்பு நியமனத்தின் மூலம் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் போதுமான தகுதி வாய்ந்தவர்கள் கிடைக்காததால், 100 பணியிடங்களில் 72