உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

502

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது


பணியிடங்களை மாத்திரம்தான் நிரப்ப முடிந்தது என்பதை மாண்புமிகு உறுப்பினர்களுக்குத் தகவலாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். போதுமான தகுதிவாய்ந்த ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் கிடைக்காத காரணத்தால் இடைநிலை ஆசிரியர் 450 பணியிடங்களும், சுருக்கெழுத்துத் தட்டச்சர் 450 பணியிடங்களும் நிரப்பப்படாமல் இன்னமும் காலியாகவே இருந்து வருகின்றன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதற்குத் தகுதி உள்ளவர்கள் கிடைக்கவில்லை. ஆட்கள் இருக்கிறார்கள். அதற்கான தகுதி உள்ளவர்களாக அவர்கள் இல்லை என்ற அந்தக் காரணத்தை நான் இங்கே எடுத்துக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். இந்தக் காலிப் பணியிடங்களையும் நிரப்புவதற்கு, இங்கு ஓர் உறுப்பினர் பேசும்போது குறிப்பிட்டதைப்போல, நிஜாமுதீன் என்று நான் கருதுகிறேன். அவர் குறிப்பிட்டதைப்போல, அவர்களுக்குத் தேவையான பயிற்சி அளிக்கப்படும். அந்த இடங்களை நிரப்ப முடியாமல் இருப்பதற்குக் காரணம், தகுதி இல்லை. அந்தத் தகுதியை உருவாக்குகிற அளவுக்கு தனிப் பயிற்சி (Special coaching) அவர்களுக்கு நிச்சயமாக வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி) இப்போதே பழங்குடியினமக்களுக்கும், ஆதிதிராவிடர்களுக்கும் (Special coaching) கழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அதைப்போல இப்போது கணக்கிட்டு வெள்ளை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள 11,264 பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப எந்தெந்த தொகுதிகளில், (Groups), போதுமான தகுதி வாய்ந்த நபர்கள் கிடைக்கவில்லையோ அந்தப் பிரிவினருக்குத் தேவையான பயிற்சியை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே எல்லா உறுப்பினர் களும் இதைப் பாராட்டி வரவேற்று, சில அரிய யோசனைகளை எல்லாம் கூறியிருக்கிறார்கள். எல்லோரும் நல்ல யோசனை களைச் சொன்னார்கள். நம்முடைய அப்பாவு மாத்திரம், அமைச்சரவையிலே இடஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டார். அதை அடுத்த ஆண்டு பார்க்கலாம் என்று நான் அவருக்குச் சொல்லிக்கொள்கிறேன். அடுத்த முறை அப்பாவு ஆசை தீருகின்ற அளவுக்கு, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே அந்த இடஒதுக்கீடு நிரப்பப்படும் என்பதை நான் அவருக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி) அவர்