கலைஞரின் சட்டமன்ற உரைகள்
503
ஏதோ நாங்கள் எல்லாம் பெரியார், அண்ணாவைத்தான் சொன்னோம், காமராஜருடைய பெயரைச் சொல்லவில்லை என்பதைப்போலக் கருதிக்கொண்டு எடுத்த எடுப்பிலேயே காமராஜர்தான் கொண்டுவந்தார் என்று சொன்னார். நாங்களும் அவரை மறக்க விரும்பவில்லை. 1954ஆம் ஆண்டு நடைபெற்ற சமூக நீதிப் போராட்டத்திலே தந்தை பெரியார் தலைமையில், பேரறிஞர் அண்ணா தலைமையில் முறையே திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் போர்க்களத்திலே நின்ற அந்தக் காலக்கட்டத்தில், பெருந்தலைவர் காமராஜர் களத்திலே இறங்கி போரிடா விட்டாலும்கூட, அந்தத் திராவிட இயக்கத்தினுடைய அந்தக் குரலுக்கு ஆதரவாக பண்டித நேருவிடத்திலே பரிந்துரை செய்தவர் பெருந்தலைவர் காமராஜர் என்பதை நன்றியுள்ள நாங்கள் மறந்துவிட மாட்டோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).
இன்னமும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. இதே மாமன்றத்திலே கே. டி. கோசல்ராம், அதைப்போல நம்முடைய ஆர். வி. சாமிநாதன் இருவரும் முழங்கிய முழக்கங்கள் எல்லாம் எங்களுடைய காதுகளிலே ஒலித்துக்கொண்டிருக்கின்றன. சுப்ரீம் கோர்ட்டில் - நீதிமன்றத்திலே - இடஒதுக்கீடு, சமூக நீதிக்கு ஆபத்து ஏற்பட்டதும் அப்போது இருந்த காங்கிரஸ் அமைச்சர்களைப் பார்த்து ஓங்காரக் குரல் கொடுத்து, ஓங்கிக் குரல் கொடுத்தவர்கள் ஆர். வி. சாமிநாதன், கே. டி. கோசல்ராம் என்பதை நாங்கள் மறந்துவிடவில்லை. அப்படிப்பட்டவர்கள் எல்லாம் காங்கிரஸ் இயக்கத்திலே இருந்தாலும்கூட, திராவிட இயக்கத்தினுடைய அந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு தந்தார்கள். அதேபோல என்னுடைய அருமை நண்பர் எம்.ஜி.ஆர் அவர்கள் பொருளாதார ரீதியிலே, 9000 ரூபாய் வரையிலே இருந்தால்தான் அவன் பிற்போக்கு, பிற்படுத்தப் பட்டவன், 9000 ரூபாய்க்கு மேல் ஒரு ரூபாய் சம்பாதித்தாலும் அவர்கள் முன்னேறிய சமுதாயம் என்ற ஒரு பொருளாதாரக் கொள்கையை, பொருந்தாத கொள்கையை அறிமுகப்படுத்திய போது நாங்கள் எடுத்துச் சொன்னோம், அவர் கேட்கவில்லை. அப்போதும் ஒரு போராட்டம் தேவைப்பட்டது. ஊருக்கு ஒரு பொதுக் கூட்டம் நடத்தினோம். அந்தப் பொதுக்
அ
ப