பக்கம்:மான விஜயம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xii

சிறைக்கோட்டத்திற் கண்டு இக்கற்செய்தியை அவற்குரைத்து அரசன் முன் னர்ச்சேரமானேயுங்கொண்டு சென்று இருபெருவேந்தரையும் நட்பாளராக்கி

அவ்விருவாது குறையையும் ஒருங்கே நீக்குங் கருத்தினராய் வருகின்ருர்,

மற்று, சிறைக்கோட்டத்திருந்து அயருஞ் சேரமான் தான் அங்கிலேயி லிருந்து வருந்துவதனினும் உயிர்துறத்த லுயர்வாமன்ருே வென்றெண்ணி - மனமறுகித் துன்புற்றனன். இன்னணங் துன்புற்று அரிதிற் ஆருங் களம். பொழுதுபோக்குஞ் சோமான், வழிகாண் முற்பகற்போழ் - தில் தண்ணிர் வேட்கைமீதுாரப், பொறுக்கலாற்ருது சிறைக் கோட்டங் காவலரை விளித்துத் தான்றன் ஏவலரைப் பணிக்குமாறுபோலப் பருகு நீர் கொணர்மினெனப் பணித்தனன். அவ்வாறு பணிப்பக் கேட்ட காவலர், உடனே செல்லாசாய்ச் சிறிது காலத் தாழ்த்துச் சென்று நெடுநோங் கழித்த பின்னர் ஒருவன் கொஞ்சங் தண்ணிரைச் சோமான் பருகுமாறு மிக்க எக்கழுத்தத்தோடு கின்று ஒரு கையால் டேட்டினன். அங்கனம் அவன் நீட்டிய நீர்க்கலத்தைச் சேரமான் கைக்கொண்டானல்லன். உடனே கோட்டங் காவ லன் வெகுண்டு வரம்பு கடந்து மன்னவனே நகையாடினன்; பின்னர் அந்நீர்க் கலத்தைச் சோமா னருகிலேயே வைத் தகன்றனன். அவன் அகன்றபின்னர்ச் சேரமான் மானமே யுயிரினும் மாண்புடைத்தாமேன மதித்து அந்நீரினப் பரு காமலே யிருந்து உயிர் துறந்தனன். அந்தோ! : மானமழிந்தபின் வாழாமை முன்னினிதே என்ற புலவர் வாக்கும் பொய்யோ? இதனேக் காவலருளொரு வன் அரசற் குரைப்பான் சென்றனன். இடையிற் சிறிது போழ்தினுள் ஆண்டு அக மகிழ்ச்சியோடும் அடைந்த பொய்கையார் சிறைக்கோட்டம் புக்குச் சேர மான் கணக்காவிரும்பொறை கிடந்தவிடஞ் சென்ருர்; அவனைக் கண்டார். கலங்கினர், க.அழ்ந்தார்; எழுந்தார், விழுக்தார், அறிவழிச்தார், தம்மை மறந்தார் ; மீட்டும் அறிவுகூடி யெழுத்தனர், சேரமான உற்று கோக்கினர் பற்றித் தூக்கினர், தம்மார்பம் எற்றித் தாக்கினர். அவ்வேளையில் ஒரேட்டிற் செந்தமிழ்ச் செய்யுளொன்று வரையப்பெற்றுக் கணக்காலிரும்பொறையின் மார்பிற் கிடந்தது வெளிப்பட்டது; அதனை யெடுத்தார், படித்தார், கைசோ விடுத்தார்; அண்ணல் சேரமான வாரியனேந்து பெரிதும் வாய்விடுத்து அழுதாற்றினர். காரியம் மிஞ்சிப் போயிற்றென்றுணர்ந்த ஈற்றமிழ்ப்பாவலர் தம்து கன்மாளுக்கன் பிரிவினையாற்றகில்லாது ஆண்டே சமாதியிலிருந்து யாக்கையை வீழ்த்தனர். அதன்மேற் சோழனுஞ் சிறைக்கோட்டஞ் சென்று சேர்ந்து, ஆண்டுப் புலவரும் மாளுக்கரும் ஒருங்கே பிறந்து கிடப்பக்கண்டு, தேவி கண்ட தீக்கனவின் பயன் பலித்தவா வுணர்ந்து பெரிதும் புலம்பினுன்; உண்மை யுணர்த்து தன் சிறை காவலரைத் தெழித்தான், பழித்தான், சிறைச் கோட்டத்தை பழித்தான். பின்னர்த் தான் அறியாது செய்த இப்பாவ்ச்

செயல்கட்குங் கழுவாயாகத் தேவகுலம் பல குயிற்றினன்.

  • இனியசாற்பது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/11&oldid=656077" இலிருந்து மீள்விக்கப்பட்டது