பக்கம்:மான விஜயம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* *

xiii

இதுவே இக்காடகத்தின் கதைச் சுருக்கமாம். இஃது அங்கம் என்னும் ஒருவகை நாடகச் சாதியின் பாற்படும். இதனிலக்கணத்தை எமது நாடக வியலிற் கண்டுகொள்க. இது யாம் புனேந்து வெளிப்படுத்திவரும் நாமகள்.சிலம் பின்கண் எட்டாம் பரலாம். இது பெரும்பாலும் அகவல் யாப்பினியன்றுளது; சிறுபான்மை ஆங்காங்கு வெண்பாவும் விருத்தப்பாவும் பிறவும் விாவி வக் தளது. இடையிற் களவழிகாற்பது நூலினின்றும் சில பாக்கள் மேற் கொண் டுரைக்கப்பட்டுள. இஃது இன்னணம் முற்றுஞ் செய்யுளாய் முடிந்துள தேனும் பாத்திரங்களின் ஏற்றத்தாழ்வுகருதிச் சொல் விகற்பங்களும் கடை வேறுபாடுகளும் ஆங்காங்குக் காட்டப்பட்டுள; ஆதலின் இது நடித்துக்காட் டும் நலமுளதாகுமென்றற்கண் யாதோர் ஐயப்பாடு மில்லை. இனிக் களவழி நாற் பதும், ' குழவியிறப்பினும்” என்ற புறப்பாட்டுமே இத்தமிழ் நாடகத்திற்கு முதனூலென நின்று உதவி புரிந்தன.

இவ் வங்கத்தின் முதற் களத்தில் ஆன்ம லக்கணமும்; இரண்டாங் களத்திற் போர்செயல் திேயும்; மூன்ருங் களத்தில் மெய்யுணர்ந்தாரியல்பும், கலைகலமுடையார் யாக்கை கலங்கருதாதிருத்தலும், மனநிறைவின் மாட்சியும்; நான்காங் களத்திற் கனவுகாட்சியினியல்பும், காரணகாரிய முறைப்பாட்டின் பெற்றியும், கடவுளார் செயற்கருத்தும்; ஐந்தாங் களத்திற் பெரியோரைப் பேணுமாறும், குருவினிடத் தொழுகுமாறும், வாழ்க்கைப்பயனும்; ஆருங் களத்திற் பொருட் செல்வத்தி னின்றியமையாமையும், களியாட்டின் தீமையும், இவ்வுலக வாழ்க்கையின் மேதகவும், யாக்கைச் சிறப்பும், தற்கொலைப் பாவ மும், மானத்தின் மாண்பும், ஆசிரியர்க்கு மாளுக்கர்பாலுள அன்பும், மன வுணர்வில்வழிப் பாவமின்மைக்கோளும், பிறவும் விாற்றல் விதிமுகத்தானும் மறைமுகத்தானும் உதாரண முகத்தானும் காட்டப்பட்டுள பான்மை அன் புடையார்க்கு எளிதிற் புலப்படும்.

முதற்கண் இந்நூல் மாதந்தோறும் ஆங்கில மொழியின் அச்சிட்டு வெளிப்படும் கிறித்தவக் கலாசாலைப் பத்திரிகையின்கட் சிறிதுசிறிதாகப் பிரசுர மாகி வெளிப்போந்தது ; அது கண்ட நண்பர் பலரும் நூலினத் தனித்து வெளியிடல் வேண்டினமையின் இது வெளிப்படுவதாயிற்று. தம் பத்திரிகையி னின்றும் யாம் பெயர்த்து அச்சிட்டுக் கொள்ளும் உரிமைதந்துதவிய அப் பத் திராகிபர் மாட்டு வந்தனத்துடன் நன்றிபாட்டுதலைத் தவிர்த்து யாம்வேறு செயக்கடவ கைம்மாறென்னே முற்றும் ஆங்கில மொழியானியன்று வெளிப் படும்.அப்பத்திரிகையின்கண் விலக்கென எம் புன்னூலையும் பதிப்பித்து எம் மைப் பலரும் நன்கு மதிக்குமாறிபற்றிய அப்புத்திராகிபர் கருணத்திறம் ஒரு பொழுதும் மறக்கற்பால தன்று.

இனி இது பற்பல தொழில் புரியுங்கால் இடையிடைக் கிடைத்த அவ காசங்களிலெழுதிய தாகலின் இதன்கண் வழுஉக்கள் பல மலிந்திருத்தலுங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/12&oldid=656078" இலிருந்து மீள்விக்கப்பட்டது