பக்கம்:மான விஜயம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xvi

பொறை சிறைவீடு பெற்றமை கூறப்படாததோடு துஞ்சிய என்ற சொல்லால் அவனிறந்தான் என்பதும் புலனுகின்றது. இதனை ஆதாரமாகக் கொண்டே மானவிஜய ஆசிரியரும் கணக்காவிரும் பொறை உயிர் நீத்தமையையே கூறி னர். ஆங்கினமெனில், களவழிபாடிச் சிறைவீடு பெற்றது பொய்யோ என் பார்க்குச் சமாதானமாகச் சிறைவிடு பெற்றதும் உண்டு அவன் துஞ்சியதும் உண்டு, என்றிரண்டு பகுதியையும், ஒருவாறு பொருத்தியே தமது நாடகக் கதையை ஆசிரியர் அமைத்தனர்.

இது கிற்கத், தமிழ் நாவலர் சரிதையென்னும் நூலுள், சோன் கணக் காலிரும் பொறை செங்களுனுற் குணவாயிற் கோட்டத்துத் தளைப்பட்ட போது பொய்கையாருக்கு எழுதிவிடுத்த பாட்டு," என்ற தலைப்பின் கீழ் மேற் குறித்த குழவி பிறப்பினும்,' என்ற புறப்பாட்டுக் காணப்படுவதோடு, அதன் கீழ், இதுகேட்டுப் பொய்கையார் களவழி நாற்பது பாடச் செங்கணுன் சிறைவிட்டு அரசளித்தான்,' என்ற வாக்கியமும் காணப்படுகின்றது. இதுபுற நானுாற்றிற் கண்ட குறிப்போடு மாறுபடுவது வெளிப்படையாகத் தெரிகிறது. இனிச், சோழன் செங்களுளுேடு பொருது பற்றுக் கோட்பட்டுச் சிறையின்கண் நீர் பெருது துஞ்சிய கணேக்காவிரும்பொறை வேறு என்றும், களவழி நாற்பதாற் சிறை வீடு பெற்ற அரசுரிமை எய்தியவன் இன்னவன் வழித்தோன்றலாகிய மற்ருெரு கணேக்கா விரும்பொறை யென்றும், முன் னவளுெடு பொருதவன் எண்டோனீசற்கு எழுபது மாடஞ்சமைத்த முதற். செங்கட் சோழனென்றும், பின்னவைெடு டொருதவன் பொய்கையாரால் களவழி பாடும் புகழ்பெற்றஇரண்டாஞ் செங்கட் சோழனென்றும், பெரிய புராணத்திற் சேக்கிழார் கோச்செங்கட்சோழன் வரலாறு கூறுமிடத்து, “ அனபாயன், முந்தைவரும் குல முதலோராய முதற் செங்கணுர்" என்று விதத்து பாராட்டியதே இதற்குச் சான்றென்றும் சிலர் கூறுவர். இங்ஙனம், துஞ்சிய' என்றதும் சிறைவீடு பெற்று அாசெய்தியதும்' ஒன்றற்கொன்று முரண்பாடுற்றுக் கிடத்தலே இத்தகைய ஆசங்கைக்கு இடனுகின்றது.

மேற்கூறியவற்றை யெல்லாம் துணித்து நோக்குமிடத்துத் துஞ்சிய' என்ற சொற்கு, மயங்கிக்கிடந்த அல்லது மூர்ச்சித்துப்போன' என்று பொருள் கொள்ளின், வெளிப்படையில்முரளுகத் தோன்றும். இவ்விரு பகுதிகளும் சிறிதும் இடர்ப் பாடின்றிப் பொருந்தும். துஞ்சிய' என்ற சொல் இறந்த என்ற பொருளையே மிகுதியும் தருவதாயினும் இங்கு மூர்ச்சித்த என்று பொருள் கொள்ளவேண்டும், என்று பிரமயூரீ மகாமகோபாத்தியாய தாகூதி ணுத்ய கலாநிதி உ. வே. சாமிநாதையர் அவர்கள் (சங்கத்தமிழும் பிற்காலத் தமிழும் பக்கம் 94) கூறியது மிகவும் பொருத்த்முடையது.

. ஈதிங்கனமாகவும், மானவிஜய வாசிரியர்கதையினே வேறுவிதமாக முடித தது சாலாதே யெனின், அற்றன்று; உண்மை எவ்விதமாயினும், ஆசிரியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/15&oldid=656081" இலிருந்து மீள்விக்கப்பட்டது