பக்கம்:மான விஜயம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 வி. கோ. சூரியநாராயண் சாஸ்திரியாரியற்றிய (முதற்

  • காண்ஞாயி அற்ற செருவிற்கு வீழ்ந்தவர்

வாண்மாய் குருதி களிறுமுக்கத்-தாண்மாய்ந்து முற்பக் லெல்லாங் குழம்பாகிப்-பிற்பகற் 50. அறுப்புத் துகளிற் கெழுஉம் புனனுடன்

றப்பியா ரட்ட களத்து.' (60) * கவளங்கொள் யானையின் கைதுணிக்கப் பட்டுப் பவளஞ் சொரிதரு பைபோற்-றிவளொளிய வொண்செங் குருதி யுமிழும் புனனுடன் 55. கொங்கரை பட்ட களத்து.' (61)

  • இருசிறக ரீர்க்குப் பரப்பி பெருவை

குருதிப் பிணங்கவருந் தோற்ற மதிர்விலாச் சிர்முழாப் பண்ணமைப்பான் போன்ற புனனுட

னோாரை யட்ட களத்து.' (52)

(செய். - 60) நாள் ஞாயிறு உற்ற - விடியற்காலேயில் உண்டான, செருவிற்கு வீழ்ந்தவர் - போரின்கண் இறந்து பட்டவருடைய வாள் மாய்குருதி - வாள் அழுக் துதலாற் சொரிந்த குருதியை, களிறு உழக்க - களிறுகள் உழக்குதலிளுலே, தாள் மாய்ந்து கால்களாலே சுருங்கி, முற்பகல் எல்லாம் குழம்பாகி - பகலின் முற்பகுதி யெல்லாம் சேருகி, பிற்பகல் துப்புத்துகளிற் கெழுஉம் - பகலின் பிற் பகுதியிற் பவளத் தூளாய் ஆகாய வெளியெங்கும் பாந்து செறியாகிற்கும்; புனல் காடன்- காவிரியின் கீர்வளமுள்ள சோழநாட்டையுடைய செங்களுன், தப்பியார் அட்டகளத்து - பகைவரைக் கொன்ற போர்க்களத்தின்கண்.

களத்துக் குருதி மாய்ந்து குழம்பாகித் துகளிற் கெழுஉம்என வினைமுடிவு செய்க. அப்பொழுதலர்ந்த மலரை காண்மலர் என்ரும்போல, சாண் ஞாயிறு உதய பாதுவினை யுணர்த்திற்று. ஞாயிறு அது தோன்றுங் காலத்திற்கு ஆகுபெயர். இனி ஞாயிறு காள்ளன மாற்றிச் சூரியன் உதிக்கும் காட்பொழுது என்றுக் கூறலாம். இன்னும், காள் - விடியற்காலையில், ஞாயிறுற்ற செரு - ஞாயிற்றினை யடைதற்குத் காரணமாகிய போர் என்பாருமுளர். cf. கதிருடல் வழிப்போய்க் கல்லுழை கின்முேர் ’ (கல்லாடம் - 8.) செருவிற்கு - வேற்றுமை மயக்கம். களிறு தாள் உழக் கக் குருதி மாய்ந்து என மாற்றுக. மாய்க்து - சுருங்கி. முற்பகல், பிற்பகல் - முன் பின்னகத் தொக்க ஆகும் வேற்றுமைத் தொகை, கெழுவுதல் - செறிதல், நெருங்குதல். துப்பு - பவளம். கப்பியார் - தவறு செய்தோர், எனவே பகைவர்.

(செய். - 61) (பொழிப்புாை) புனளுடன் கொங்கரைக் கொன்ற போர்க்களத் தின்கண், கவளத்தைக் கொள்ளும் யானைகள் தமது கைகள் துணிக்கப்பட்டுப் பவளத்தைச் சொரிகின்ற பைபோல், விளங்காகின்ற ஒளியையுடைய ஒள்ளிய செங்குருதியைச் சொரியா கிற்கும். கவளம் - அரிசி, கருப்புக்கட்டி, செய் முதலிய வற்றைக் கலந்து உருண்டையாக்கி யானைக்குத் தரும் உணவு. யானைக் கைக்குப் பையும் சோரிக்குப் பவளமும் உவமை. கொங்கர் - கொங்க காட்டினர்.

gt. பைகொரி பவழம் போலப் படிதாழ், கைகொரி யுதிரம் கான்றுவர் கிழிதா.” (பெருக்கதை. 53 - 27. 28.) . - (செய். - 62.) (பொழிப்புரை) இாண்டு சிறகின்கண்ணுமுள்ள ஈர்க்குக்களைப் பாப்பிக் கழுகுகள் குருதி சோரும் பிணங்களைக் கவர்கின்ற தோற்றம், இலக்கமில் லாத வோசையையுடைய முழாவினைப் பண்ணமைப்பான யொத்த, நீர்வள சாடன் பகைவரைக் கொன்ற போர்க்களத்துக்கண். சிறகர் - அர் போலி. சிறகு - இறகு களின் தொகுதியாகிய பக்கம். எருவை - கழுகு. அதிர்வு கலக்கம் ; டுேக்கம்.

  • களவழி காற்பது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/51&oldid=656116" இலிருந்து மீள்விக்கப்பட்டது