பக்கம்:மான விஜயம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (முதற்

(சேரமான வாரியனைத்து இரங்கிப்பாடுகின்ருர்) மான முருவெடுத்து வந்தனைய மன்னவனே

ஞான வொளிபரப்பு கல்வெண் மணியேயோ! (107) அன்பே வடிவாயமர்ந்தவெழிற் கோமானே

270. நன்பே ருலக நயந்து நடந்தனையோ? (108)

காட்சிக் கினிய கவினுடைய காவலனே மாட்சி லஞ்சான்ற மாணவவோ! மாணவவோ ! (109) தண்ணமிழ்தம் போலுந் தமிழின் சுவையறிந்த வண்ணலே யென்னகொலோ வாருயிரி னிங்கினையே! (110)

275. உன்னைப் பிரிந்திங் கொருகணமுந் தாழேன்யா

னென்னுடலை நீத்தங் கெழுந்தேன் பெருமானே! (111).

(மெளனம்)

என்சிறை நீக்கற் கிதுவே யற்றம் ; புன்புலாற் சுமையைப் போகட்டு கின்றேன்; நின்மலப் பொருளி னேர்ந்து புகுந்தேன்; 280. செம்பொருட் சேர்ந்துபே ரின்பமுற் றேனே. (112)

(சுகாதனமேவி யோகசமாதியி லிருக்கின்ருர்) சிறைகாவல னிரண்டாவன்:- (ஓடிவந்து தொட்டுப்பார்த்து)

என்ன வநியாயம் இழவுமே லிழவா விளைஞ்சா லெப்படி மேலெழ முடியும்? இந்த மனிசனும் வந்து தொலைஞ்சான் ! போன பயலும் புதைஞ்சு போனுன்! (சேபத்தியத்துண் முழக்கம்.) 285. என்னடா சத்தம்? மன்னவர் வருகையோ? (113)

(சிறைகாவலன் முதல்வன் வருகின்றன்.) சிறைகாவலன் முதல்வன்:-(பெருமூச் செறிந்து)

விரைவி லிவ்விட மரைசர் வருவார். சிறைகாவல னிரண்டாவன்:-(மனம் வருந்தி)

வந்த புலவனு மாண்டு போனுன் !

(மெய்காப்பாளரோடு செங்களுன் வருகின்ருன்) (செய். - 107) வெண்மணி - முத்து. (செய். -108) அமர்ந்த பொருள் ான்பேருலகம் - முத்தி. (செய். -109.) கவின்.அழகு. கலம்-ான்மை. (செய். . 111) தாழேன் - தாமதியேன். அங்கு - நீ சென்ற அவ்விடம். (செய். - 112.) அற்றம் - சமயம். நின்மலப்பொருள்-அழுக்கற்ற பொருள்; என்றது கடவுளை. செம்பொருட் சேர்ந்து - மெய்ப்பொருளைக் கலந்து. சுகாதனம் - யோகாசனங்களுள் ஒன்று.

284. போனபயல் என்றது முதற்காவலனை. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/69&oldid=656134" இலிருந்து மீள்விக்கப்பட்டது