பக்கம்:மாபாரதம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

மாபாரதம்


இந்தத் துயரங்களுக்கு எல்லாம் காரணம் சினத்தின்முழு வடிவம் ஆகிய துருவாசன் தான் என்று விளக்கப்பட்டது. அவன்வைகுந்தம் அடைந்தான். சேவகம் வேலை செய்யும் ஏவலை உடைய காவலாளிகள் தம்மைக்குட்டித் தெய்வங்கள் என்று மதித்துக் கொள்கின்றனர். உள்ளே செல்ல அனுமதி தேவை என்றனர் அறிவு மிகுதி படைத்த முனிவன் தன்னை அவமதித்ததாக எடுத்துக் கொண்டான்.

“நான் யார் என்பது தெரியுமா?” என்றான்.

“பாரத ரத்தினராக இருக்கலாம் மாரத வித்தகராக இருக்கலாம். யாராக இருந்தாலும் உங்கள் பெயரைச் சொன்னால் அனுமதி பெற்று வருவோம்” என்றனர்.

“இந்த ஒழுங்கு, நியதி, வரிசை, அனுமதி எல்லாம் கீழே இந்த மக்கள் பின்பற்றும் கட்டுகள். தேவர் உலகில் ஒழுங்கை எதிர்பார்க்கிறவர்கள் இங்கு இருக்கத் தகுதி இல்லை” என்றான் துருவாசன்.

காவலாளிகள், “அதனால் தேவரினும் மாந்தரே உயர்ந்தவர் என்று தெரிகிறது” என்றனர்.

“மக்களை மதிக்கிறீர் நீர்; பூமியிற் சென்று மானிடனாகப் பிறந்து மா இடர் அனுபவிப்பீராக” என்று துருவாசன் சாபமிட்டான்.

பிறப்பு என்றாலே அஞ்சிப் பரபரப்பு அடைந்தனர்.

நிலை கெட்ட பிழைப்புக்கு அஞ்சி அலைவுற்றனர்; திருமால் திருமகளிடம் சொல்லிவிட்டு வாசலுக்கு வெளியே வந்து இந்தக் குழப்பத்தைக் கவனித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/111&oldid=1048184" இலிருந்து மீள்விக்கப்பட்டது