பக்கம்:மாபாரதம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

மாபாரதம்


“யார் அது?”

நடன சிங்காரி ஊர்வசி என்பதை அறிந்தான்.

“நீங்கள் என்னைப் பாராட்டியது என் நினைவு விட்டு அகலவில்லை” என்றாள்.

“உங்கள் கலையை விமரிசித்தேன்” என்றான்.

“நீங்கள் ஆணழகன்” என்றாள்.

“பெண்ணழகி பாராட்டினால் பயன் உண்டு” என் றான்.

“என் அழகு உன்னை மயக்கவில்லையா?” என்றாள்.

“உன் வயது என்னைத் தயங்க வைக்கிறது” என்றான்.

“தேவ உலகில் இளமை நிலைத்திருப்பது” என்றாள்.

“உறவுகள்” என்றான்.

“மாறுவது” என்றாள்.

“என் முன்னோர் ஒருவன் மனைவியாக இருந்தீர்; அதனால் உம்மைத் தாய்மையோடு பார்க்கிறேன்” என்றான்.

“உன் ஆண்மை என்ன ஆயிற்று?” என்றாள்.

“அடங்கி இருக்கிறது” என்றான்.

“இனி முடங்கிக் கிடக்க” என்று சாபம் இட்டாள். அவன் பேடி ஆனான். மறுநாள் இந்திரன் அவனை அழைத்து வர ஆள் அனுப்பினான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/141&oldid=1048197" இலிருந்து மீள்விக்கப்பட்டது