பக்கம்:மாபாரதம்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

239


இச்சங்கு ஒலி கேட்டுத் தருமன் விசயனுக்கு அழிவு நேர்ந்து விட்டதோ என்று அஞ்சிக் கலக்கம் அடைந்தான். அதனால் தனக்குக் காவலாக இருந்த சாத்தகியையும் வீமனையும் தொடர்ந்துபோர்க்களம் அனுப்பி வைத்தான். சாத்தகியும் வீமனும் களத்தில் புகுந்து கவுரவர் தலைவர்கள் பலரைக் கொன்று குவித்தனர். வீமன் துரியனின் தம்பியர் பலரைக் கொன்று குவித்தான்.

விசயன் சயத்திரதனைத்தேடி முன்னேறினான். சூரியன் அத்தமிக்கும் நேரம் அணுகிவிட்டதால் அருச்சுனன் அவனைக் கொல்வது உறுதி என்று கருதி “நெருங்கி நில்லுங்கள்” என்று கூறிக் கொண்டு அவனை நிலவறை யில் பதுக்கிவைத்தனர்; சயத்திரதனை எங்கும் காணாமை யால் கொல்வது அரிது என்று கண்ணனும் அருச்சுனனும் திகைத்தனர்.

கண்ணன் ஒரு சூழ்ச்சி செய்தான். தன் கையில் உள்ள சக்கரத்தை ஏவிச் சூரியனை மறைக்கும்படி செய்தான். சக்கரம் கதிரவனை மறைக்கப் போர்க்களம் போல வானம் செங்களமாக மாறியது. அந்திவானம் சிவப்புற்றதைக் கண்டு கதிரவன் சாய்ந்து விட்டான் என்று தவறாக நினைத்துச் சயத்திரதன் தைரியமாக வெளிப்பட்டான். வெளிப்பட்டதோடு அச்சம் நீங்கியவனாய் அமைதி காட்டினான்.

இனி அருச்சுனன் தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் அவலக்காட்சியைக் கவலை இல்லாமல் காணலாம் என்று மனப்பால் குடித்தான். சயத்திரதனைத் தைரியமாகத் துரியனே முன் நிறுத்திக்காட்டி அருச்சுனனை அவமானப் படுத்தினான்; சயத்திரதனை யார் தரையில் தலைஉருளச் செய்கிறார்களோ அவர்கள்தலை நூறுசுக்கலாக வெடிக்கக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/242&oldid=1047291" இலிருந்து மீள்விக்கப்பட்டது