பக்கம்:மாபாரதம்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260

மாபாரதம்

அதனால் உயிருக்கு அழிவு நேரக்கூடும் என்பதால் கண்ணன் அவர்களை அன்று ஒர் இரவு பாசறையில் படுக்கவிடாமல் தன்னோடு அழைத்துக்கொண்டு அடுத்து இருந்த கானகத்தில் அவர்களை மறைத்து வைத்தான்.

அசுவத்தாமனின் அராஜகம்

அந்தணன் அசுவத்தாமன் தன் குல ஒழுக்கத்தை மறந் தான். உயிர்களிடத்து அன்பு காட்டும் செந்தண்மையைத் துறந்தான். க்ஷத்திரியனுக்கு உரிய வீரத் தன்மையையும் இழந்தான். சராசரி மனிதனினும் கீழ் நிலைக்குச் சென்று விட்டான்.

துரியனிடம் கொண்டிருந்த பற்றும் பாசமும் நன்றி யுணர்வும் அவனை நாயினும் இழிந்த செயலைச் செய்யத் தூண்டியது. நீரில் முழுகிக் கிடந்தவனை எழுப்பிக் குருதியில் முழுகவைத்த கொடுமை அவனுக்குக் குழப்பத்தை உண்டு பண்ணியது. பழிக்குப் பழிவாங்கும் பகை உணர்வு உச்ச கட்டத்தை எட்டியது; அழிவுப் பாதையில் அவனைக் கொண்டு நிறுத்தியது.

அழுவதற்கும் ஆள் இல்லாமல் அலங்கோலமாகத் கிடந்த அரவக் கொடியோனை அடைந்து அங்கலாய்த்தான்.

“கண்ணன் செய்த சூழ்ச்சியால் மன்னர் சபையில் என்னைத் தவறாக உணர்ந்து பதவி கொடுக்க மறுத்தாய். படைத் தலைமை என்னிடம் ஒரு நாள் தந்திருந்தால் பார் முழுவதும் உனக்கு அடைக்கலம் ஆகியிருக்கும். வெற்றி யைக் கொண்டு வந்து உன் காலடியில் வைத்துப் பூஜித்து இருப்பேன். இன்று அந்தப் பஞ்சைகள் ஐவரையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/263&oldid=1047449" இலிருந்து மீள்விக்கப்பட்டது