பக்கம்:மாபாரதம்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

266

மாபாரதம்


அசுவத்தாமன் வியாசரின் பின்னர் சென்றுமறைந்து இருந்தான்; மூவரைக் கண்டு அச்சம் கொண்டு அவசரப்பட்டுத் தருப்பைப் புல் ஒன்றைக் கிள்ளி அதனை பிரம்ம அத்திரமாக மாற்றி அவர்களை நோக்கி ஏவினான். கண்ணன் கட்டளையை ஏற்று அருச்சுனன் அவ்வம் பினைத் தன் அத்திரம் கொண்டு தாக்கினான். அதுவும் பிரம்ம அத்திரமாக இருந்தது. இரண்டும் மோதிக்கொண்டால் உலகம் அழியும் என்பதால் நாரதனும் வியாசனும் அவற்றைத் தவிர்க்குமாறு வேண்டினர். திரும்பப் பெறும் ஞானம் அசுவத்தாமன் கற்றிலன். ஆகையால் அவன் செயலற்றவன் ஆகிவிட்டான், அருச்சுனன் மட்டும் திரும்பப் பெற்றுக் கொண்டான். அசுவத்தாமன் விட்ட அம்பு பாண்டவரின் வமிச வாரிசுகளைக் கருவோடு அழித்தது. அபிமன்யுவின் மனைவி உத்தரை வயிற்றில் உதயமாகிக் கொண்டிருந்த கருவை மட்டும் கண்ணன் காப்பாற்றி விட்டான். அவனே பரீட்சித்து மன்னன் என்ற பெயரில் வாரிசாக வரமுடிந்தது.

அவன் தான் செய்த தவறுக்கு ஈடாகத் தன் சிரசில் இருந்த மணியை அறுத்து எறிந்தான். கன்னனுக்குக் கவச குண்டலங்களைப்போல அது அவனுக்குத் தற்காப்பு அளித்தது. அதை இழந்தபின் மணி இழந்த நாகம் ஆனான். அம் மணியைத் திரெளபதியின் கையில் சேர்த்தனர். அவள் ஒருவாறு சினம் அடங்கினாள். அசுவத்தாமன் சமுதா யத்தில் அனைவராலும் ஒதுக்கப்பட்டுப் பித்தம் பிடித் தவன்போல் அலைந்து அழிந்தான். கல்லெறிப்பட்டுக் கல்லறையை அடைந்தான்.

தருமன் தம்பியரின் துணையோடு பதினைந்து ஆண்டுகள் ஆட்சியை மேற்கொண்டான். அவன் பரா மரிப்பில் திருதராட்டிரனும் காந்தாரியும் ஒரு குறையும் இல்லாமல் வாழ்ந்து வந்தனர். திருதராட்டிரன் தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/269&oldid=1047461" இலிருந்து மீள்விக்கப்பட்டது