பக்கம்:மாபாரதம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

33

உரிமை தரும்போது அதனை எடுத்துக்கொள்வதில் சிறுமை இல்லை” என்றான். அவன் மன உறுதியை மதித்தாள்.

“தாய்மை அடைவது பெண்ணின் உரிமை; அதற்குத் தான் தடையாக இருப்பது பொருந்தாது” என்றான். இது ஒரு புதுமைக் கருத்தாக இருந்தது.

வாழ்க்கை என்பது நிகழ் காலத்தை நம்பி மட்டும் அமைவது அன்று; நமக்குப்பின்னால் நிலைத்து நிற்கும் செயல்களைச் செய்வதுதான் அறிவுடைமை. நம்பெயரைச் சொல்வதற்கு நன்மக்கள் வேண்டாமா? கற்பு என்பது கணவன் மனைவி உறவு பற்றியது, பிள்ளைப் பேறு என்பது படைப்புத் திட்டத்தின் ஆணை” என்றான். கற்பியல் வேறு; பிறப்பியல் வேறு என்று அத்தியாயங் களைப் பிரித்துக் காட்டினான்.

“பாண்டு என்பவன் இருந்தான்; அவனுக்கு ஒருத்திக்கு இருவர் மனைவியர் இருந்தனர். இருந்தும் என்ன பயன்! பெயர் சொல்வதற்குக் கூடப் பிள்ளைகள் இல்லையே! சிந்தித்துப்பார்”.

“வாழ்க்கை என்பது நீர் ஒட்டம் போன்றது; நம் மோடு முடிவது அன்று; அதைத்தடைப்படுத்த நாம் யார்?”

“மேலும் நாம் சாதாரண குடி மக்கள் அல்ல; ஆட்சி செய்யும் மன்னர் குலத்தில் வந்தவர்கள், சந்ததி என்பது அடிப்படைத் தேவை”.

“இந்த அத்தினாபுரிக்கு ஆட்சி செய்ய நமக்கு உரிமை உண்டு; எனக்குப்பின் அதை ஏற்று நடத்த வாரிசுகள்

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/36&oldid=1048285" இலிருந்து மீள்விக்கப்பட்டது