பக்கம்:மாபாரதம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

69

அந்தப்பார்ப்பனச் சேரியில் பதுங்கிக் கிடப்பது பயன் இல்லை என்பதால் மைந்தர்களிடம் சொல்லிப் புறப்படச் செய்தாள்.

கால் கடுக்க நடந்து காரிருளில் அருச்சுனன் விளக் கேந்தி ஒளி காட்ட ஊர் கடந்து சென்றனர். அவர்கள் குடும்ப நலத்தில் அக்கரை கொண்டிருந்த வியாசன் வழியில் சந்தித்து அங்குச் செல்ல வேண்டிய அவசியத்தைச் சுட்டிக் காட்டினான். திரெளபதி மாலை சூட்டும் அவ் விழாவில் இவர்கள் துணிந்து வெளிப்படுதல் தக்கது என்று சொல்லிவிட்டுச் சென்றான். முகவரி தேடியவர்களுக்கு முகதரிசனம் தர வாய்ப்பாகவும் கொண்டனர்.

பாஞ்சாலப் பயணம்

மறுநாள் பொழுது விடிவதற்குள் பாஞ்சாலம் சேர்வது என்று நடையை விரைவுபடுத்தினர். வழியில் ஒரு நீர்த் துறைவழியே செல்லும் போது அதில் விளையாடிக் கொண்டிருந்து சித்திர ரதத்தில் வந்த கந் தருவன் ஆவேசம் கொண்டு அருச்சுனனைத் தாக்கினான். அந்தணன் என்று நினைத்து அவனை அதட்டிப் பார்க்கலாம் என்று கை நீட்டினான்; அவன் செந்தழலினன் என்பதை அவன் தன் அம்பு கொண்டு தேரைக்கரியாக்கியதில் இருந்து தெரிந்து கொண்டான். வீரம் மிக்கவனைக் கண்டு அவன் சாரமுள்ளவன் என்பதால் அவனிடம் பேரம் பேசினான். நட்புரிமை பூண்டு அவனுக்கு வழிகாட்டியதோடு தௌமிய முனிவனை அறிமுகம் செய்து வைத்து அவனோடு பாஞ்சாலம் செல்லுமாறு பகர்ந்தான்.

பொழுது விடிந்தது; தென்றல் வீசிச் சுகத்தைத் தந்தது; பொய்கை ஒன்றில் பூத்திருந்த தாமரை மலரில் தேன் உண்ண வண்டுகள் சுற்றி வந்தன. வலிமை மிக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/72&oldid=1035194" இலிருந்து மீள்விக்கப்பட்டது