பக்கம்:மாபாரதம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

மா பாரதம்

வண்டு ஒன்று தன் சிறகால் அவற்றைத் துரத்தி விட்டு அம்மலரில் அமர்ந்து தேன் உண்ணும் காட்சியைக் கண்டனர் :

அந்நீர்த்துறை அருகே மாங்கனி ஒன்று விழ அதன் மீது அங்கிருந்த மீன்கள் எல்லாம் தத்தமக்கு உரிய இரை என்று தாவின. அதற்கு முன் வாளை மீன் பாய்ந்து அதனைக் கவ் விக் கொள்ள ஏனைய மீன்கள் ஏமாற்றம் அடைந்தன.

மரங்கள்தோறும் குயில்கள் இருந்து அவர்களை விளிப்ப போலக் கூவிக் குரல் எழுப்பின.

குயில்கள் தோகை விரித்து ஆடி அவர்களுக்கு மகிழ்ச்சியை அறிவித்தன. பூக்களில் சுரும்புகள் மொய்த்தன. நீர் நிலையில் பறவைகள் தங்கின. விலங்குகள் எல்லாம் துணைகளோடு மேவின. மரங்களைக் கொடிகள் தழுவின. வில்லைத் தாங்கிய இப்பாண்டவர்கள் வெற்றி உறுதி என்ற நினைவோடு இவற்றை நன்னிமித் தங்களாகக் கொண்டனர்.

நகரத்தின் மதில்களில் பூரண கும்பம் வைத்தனர். மங்கல முழவுகள் விம்மின; பல் இயங்கள் ஆர்த்தன; சங்குகள் முழங்கின; சேனைகளும் அவற்றிற்கு உரிய அரசத்தலைவர்களும் நகரில் நெருக்கமாகக் குழுமினர். வீதிகளில் கட்டியிருந்த கொடிகள் எல்லாம் வருபவரை வா என்று அழைப்பது போல அசைந்து அழகு செய்தன. ஆவண வீதிகளில் மாட மாளிகைகளின் வனப்பினைக் கண்ட வண்ணம் சிங்கம் பசுவின்தோல் போர்த்துக் கொண்டது போல இவர்கள் பார்ப்பன வடிவத்தில் பானை செய்யும் குயவன் ஒருவன் வீட்டில் சென்று அவன் விருந்தினராகத் தங்கினர். அன்னை குந்தியைக் குயவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/73&oldid=1047472" இலிருந்து மீள்விக்கப்பட்டது