பக்கம்:மாபாரதம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

75


சகுனியைச் சுட்டிக்காட்டிச் “சூதுக்கும் சூழ்ச்சிக்கும் இவனுக்கு நிகர் வேறு யாரும் இருக்க மாட்டார்கள். அறிவாளி; சாணக்கியனின் மாணாக்கனாகத் தகுதி படைத்தவன்” என்றனர்.

அடுத்தது அசுவத்தாமனை அறிமுகம் செய்தனர்; “பேசாது அடங்கியிருக்கும் பேரறிவாளன் இவன்; போர் செய்யும் ஆற்றலினன். பிறப்பால் அந்தணன்; தொழில் சிறப்பால் வீரத் திருமகன். இவன் மேனி அழகில், படை வலியில், திண் தோள்வலியில் இவனுக்கு நிகர் யாரையும் கூறமுடியாது; இவன் துரோணனின் மகன் ஆவான்”.

அங்கதேசத்து அதிபதியாகிய கன்னனைப்பற்றிப் பேசும்போது அவன் உயர்வுகள் மிகுதியாகப் பேசப்பட்டன; உண்மை, வலிமை, உறவு, நெறி, தேசு, புகழ், வில் திறன், வண்மை இவை அத்துணையிலும் சிறப்பு மிக்கவன் இவன் என்று அறிமுகம் செய்தனர்.

அடுத்தது பலராமனை அறிமுகம் செய்தனர். நீலநிற ஆடையன் என்றும். கலப்பையைப் படையாக உடை யவன் என்றும், வசுதேவன் குமரன் இவன் என்றும் அறி முகம் செய்தனர்.

அடுத்தது கண்ணனை அறிமுகம் செய்தனர்.

“இந்தக்குரிசில் யது குலத்துத்திலகம். இவன் யது குலத்தில் பிறந்தவன்; இடையருடன் ஒருவனாய் வளர்ந்தவன். மாயம் வல்லவன் தன் மாமன் கம்சனின் உயிரை முடித்தவன்; இவன் சத்தியபாமையின் காதலன்; அவன் அவளோடு இந்திர உலகத்துச் சென்று கற்பகச் சோலையில் ஒய்வு எடுத்தவன்; மற்றும் சத்தியபாமைக்காகத் துவாரகையில் கற்பச் சோலையைக் கொண்டு வந்து நிறுவியவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/78&oldid=1048317" இலிருந்து மீள்விக்கப்பட்டது