பக்கம்:மாபாரதம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

மாபாரதம்

அந்நிலையில் அமைச்சரையும் அரும் சுற்றத்தினரையும் அழைப்பித்துத் தருமனுக்கு ஆட்சி நல்கி முடி சூட்டினான் திருதராட்டிரன்.

அழுக்காறு துரியனை ஆட்டி வைத்தது. தருமனைக் காண்டவப் பிரத்தம் என்னும் வறண்ட நகருக்கு அனுப்புமாறு தந்தையைத் துண்டினான்.

இங்கிருந்தால் அவர்கள் இங்கிதமாக வாழ மாட்டார் கள் என்பதால் அவன்பாடிய சங்கீதத்துக்குத் தந்தை ஒத்து இசைத்தான்.பாழ்பட்ட நகரைப் பண்புடையதாக ஆக்கத் தருமனே தக்கவன் என்று சொல்லி அவனை அங்கு ஆட்சி செய்ய அனுப்பி வைத்தான்.

கண்ணன் காட்டைத் திருத்தி அங்கே வளநகர் உண்டாக்குமாறு இந்திரனிடம் சொல்ல அவன் வேத தச்சனாகிய விசுவகர்மனை அழைத்துக் கூறினான். இந்திரனின் ஆணையால் அச்சிற்பி அந்நகரை அமைத்து அழகு படுத்தினான். இந்திரன் புதுப்பித்ததால் அந்நகருக்கு இந்திரப்பிரத்தம் எனப் பெயர் உண்டாயிற்று.

இவர்கள் இங்கே இனிமையாக ஆட்சி செய்து வரும் நாளில் விண்ணவர் நாட்டு இசைஞானி நாரத முனிவன் இவர்களுக்கு நல் விருந்தாக வந்தான். தமக்கு ஏதாவது அறிவுரை சொல்ல வேண்டுமென்றான் தருமன். தரும னுக்குப் போய்த் தருமம் சொல்வது மிகை; அதுமட்டுமல்ல நேரிடை இப்படிச் செய்யக் கூடாது என்றால் அதற்கு எதிர்ப்புத்தான் வரும்.

நாகரிகமாகச் சொல்லி அவர்களைத் திருத்தவேண்டும் என்று விரும்பினான். ஐவரை ஒருத்தி மணந்தாள் என்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/89&oldid=1035703" இலிருந்து மீள்விக்கப்பட்டது