பக்கம்:மாபாரதம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

பற்றிக் கதையைச் சொல்கிறார். மூல நூல் மொழி பெயர்ப்புகள் என வந்துள்ள உரைநடை நூல்களில் வில்லி பாரதத்தில் கூறப்படுவதுபோல் கதை ஒட்டம் சரியாக அமையவில்லை. புதை பொருள் ஆராய்வது போல அதை வெளியிட்டிருக்கிறார்கள். வில்லிபாரதம் தெளிவாக ஆற்றொழுக்காகக் கதையை இயக்குகிறது. அதனையே பின்பற்றி இங்கு எழுதப்பட்டதால் கதை தெளிவாகக் கூறமுடிந்தது.

வில்லிபுத்துரார் கன்னன் முடிவும், துரியன் முடிவும் கூறிக் கதையை முடித்துவிடுகிறார். மூல நூல் மற்றும் எட்டுப்பருவங்களில் அவர்கள் பரலோக யாத்திரை மற்றும் ஒவ்வொருவர் மரணம் பற்றியும் கூறுகிறது. இது புராணிகர்களின் போக்கு; அதைத் தவிர்த்துக் காவிய அமைப்புக்கு ஏற்றவகையில் துரியனின் முடிவோடு வில்லி புத்துாரார் கதையை முடித்திருப்பது தனித்தன்மையாகும்; அதே முறையில் இங்கும் கதை முடிக்கப்படுகிறது.

கதையின் கரு பாஞ்சாலியின் சபதம்; எனினும் அது உணர்த்தும் நீதி போர் என்பது அழிவை உண்டாக்கும்; அது தவிர்க்க வேண்டியது மானுட நெறி என்றும் காட்டுகிறது.

கீதை உபநிடதத்தின் சாரம்; அது இடம் பெற்றிருப்பது பாரதத்துக்குப் பெருமை சேர்க்கிறது.

இராமயணம் லட்சிய மாந்தர்களைப் படைத்துத் தருகிறது; பாத்திரப் படைப்புகள் மகத்தானவை. பாரதம் கதை நிகழ்ச்சிகளால் சிறப்பு உடையது. பாத்திரப்படைப்புக்கு முதலிடம் தரவில்லை; கருத்துரைகள் மிகுதியும் தருகிறது; கதை நிகழ்ச்சிகள் இன்றைய நடைமுறைக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/9&oldid=1239385" இலிருந்து மீள்விக்கப்பட்டது