பக்கம்:மாயக் கள்ளன்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 12 மென்றும் அவன் நிக்னத்தான். ஆல்ை, அவன் நினத்த மாதிரி மாம்பழச் சித்தர் சாகவில்லை. அவர் எப்படியோ ஒரு பாறையைப் பிடித்துக்கொண்டு காலே நேரம் வரை ஆற்றுக்குள்ளயே மிதந்துகொண்டிருந்தார். அதிகாயிைல் அந்தப் பக்கம் வந்த சிலர், அவர் ஆற்று வெள்ளத்திற்குள் தத்தளிப்பதைக் கண்டு ஓடிவந்து அவரைக் காப்பாற்றினர்கள். மாம்பழச் சித்தர் உயிர் தப்பிப் பிழைத்து வருகிருர் என்ற சேதியைக் கேட்டவுடனே கொடுக்குச் சித்தன் ஒட்டம் பிடித்தான். அப்படிப் போகும் போதே, தேங்காய் பழத்தட்டு வருகின்ற ரகசியத்தையும் வெளியே சொல்லி விட்டுப் போய்விட்டான். அவன் எங்கு போனன் என்று யாருக்கும் தெரியவில்லே. தேங்காய் பழம் வரவழைக்கும் தந்திரத்தைத் தெரிந்த வுடனே எல்லோரும் மாம்பழச் சித்தரை இகழ்ந்து பேச ஆரம்பித்தார்கள். அதைக் கேட்டு மாம்பழச் சித்தர் பெரிதும் அவமானம் அடைந்தார். பெருமாளே மறந்துவிட்டதற்காகவும் மனம் வருந்தினர். தாம் செய்தது பெரிய குற்றம் என்றும் தெரிந்து வருந்தினர். பக்தி செய்வதை விட்டுவிட்டுச் சித்து விளையாட்டில் இறங்கில்ை கடவுளுடைய அருள் கிடைக்காது என்பதையும் தெரிந்துகொண்டார். அதல்ை அவர் அப் பொழுதே அந்த ஊரை விட்டுப் புறப்பட்டு ஒரு பெரிய கானகத்திற்குச் சென்ருர். அங்கே பெருமாளே நினத்துக் கொண்டு தவம் செய்துகொண்டே காலத்தைக் கழித்தார்.” இவ்வறு கதை சொல்லிக்கொண்டே மாயக்கள்ளன் திரும்பிப் பார்த்தான். ஆத்மரங்கன் இன்னும் தூங்கவில்லை. மலையிலே முக்கால் பாகம் எறியாகிவிட்டது. மலேயுச்சியில் இருந்த கோபுரத்தின் மேல்பாகங்கூடக் கண்ணுக்குத் தெரிந்துவிட்டது. அதனல் மாயக்கள்ளன் கொஞ்சம் தளர்ச்சி யடைந்தான். இருந்தாலும் தன்னுடைய தந்திரத்தை விடவில்லே. 'மாம்பழச் சித்தர் பெருமாளே நினைத்து மறு படியும் பாட்டுப் பாட ஆரம்பித்தார். அவருடைய பாட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/115&oldid=867610" இலிருந்து மீள்விக்கப்பட்டது