பக்கம்:மாயக் கள்ளன்.pdf/123

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


f 20 பெண்களைப் பார்க்க முடியாது. சிலர் இனிமையாகப் பாடினர்கள். சிலர் நாட்டியம் ஆடினர்கள். சிலர் ஆத்மரங் கனுக்குப் பக்கத்திலே வந்து கண்களேச் சிமிட்டினர்கள். "ஆத்மரங்கா, இந்தப் பெண்களுடைய நடனத்தைக் கொஞ்ச நேரம் பார்க்கலாம் வா’ என்று மாயக்கள்ளன் அழைத்தான்.

  • நடனமும் வேண்டாம், பாட்டும் வேண்டாம். நான் என் பெற்ருேர்க்களப் பார்க்கவேண்டும். நான் இங்கே நிற்க முடியாது’ என்ருன் ஆத்மரங்கன்.

"அதோ பார். அந்தப் பெண் எவ்வளவு அழகாக இருக்கிருள் அவளே நீ கல்யாணம் செய்துகொள்' என்று தேனெழுகப் பேசின்ை மாயக்கள்ளன். "நான் சந்நியாசி. உலக ஆசைகளைத் துறந்தவன். எனக்குக் கலியாணம் எதற்கு?’ என்று சொல்லிவிட்டு மேலும் நடந்தான் ஆத்மரங்கன். மாயக்கள்ளனுடைய தந்திரங்கள் பலிக்கவில்லை. ஆல்ை, அவன் ஆத்மரங்கண் விட்டுவிடவில்லே. கதை சொல்லிக்கொண்டே அவனுடன் போனன். மலேயுச்சியில் இருந்த கோபுர வாயிலுக்குப் பக்கத்தில் சென்றுவிட்டான் ஆத்மரங்கன். அப்பொழுது அவனுக்கு மாயக்கள்ளனுடைய தந்திரங்களெல்லாம் தெரியலாயின. மாயக்கள்ளன் யார் என்பதையும் அவன் அறிந்துகொண்டான். "மாயக்கள்ளா, நீதான எனக்குள்ளே இருந்துகொண் டிருக்கும் மனக்குரங்கு. உன்னத்தான் மனக்குரங்கு என்றும் மனப்பேய் என்றும் பெரியோர்கள் சொல்லியிருக்கிருர்கள். எனக்கு இப்பொழுது தெரிகிறது. நீதான் மாயை. என்னே எமாற்றியிருக்கிருய். உன்னே இப்பொழுதே கொன்றுவிடு கின்றேன் பார்” என்று ஆத்மரங்கன் கூவின்ை. தனது கைகளே ஓங்கினன்.