பக்கம்:மாயக் கள்ளன்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


43 சொல்லுவார். உன்னுடைய துன்பமெல்லாம் தீர்ந்து போகும்: என்ருர் முனிவர். பையன் உடனே அங்கு போக ஆசைப்பட்டான். 'தம்பி, அவசரப்படாதே. நீ அந்த வனத்திற்கு இப்படி அலங்கோலமாகப் போகக்கூடாது. நான் சொல்கிறபடி போனல்தான் அங்குள்ள ஞானமூர்த்தியைப் பார்க்க முடியும்’ என்று முனிவர் கூறினர். அவர் உடனே வேதாந்தத்திற்கு நல்ல பட்டுச் சரிகை வேட்டிகளையெல்லாம் கொடுத்தார். அவன் தயிைலே ஒரு பெரிய தலைப்பாகையை வைத்தார். அவன் கேட்ட கேள்வி களேயே ஒரு பாட்டாகச் செய்து அதை அவனுக்குச் சொல்லிக் கொடுத்தார். "இந்தப் பாட்டை ஞானமூர்த்தியிடம் சொல். அவர் உனக்குச் சரியான பதில் கொடுப்பார்’ என்று அவனிடம் கூறி அனுப்பினர்.